வீடு / சமையல் குறிப்பு / பர்மீஸ் முட்டை அத்தோ & பீஜோ

Photo of Burmese Street Food Spl Fried Egg Noodles and Egg Bejo by Sumaiya shafi at BetterButter
713
0
0.0(0)
0

பர்மீஸ் முட்டை அத்தோ & பீஜோ

Mar-29-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பர்மீஸ் முட்டை அத்தோ & பீஜோ செய்முறை பற்றி

பர்மீஸ் முட்டை அத்தோ & எஃக் பீஜே

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நூடுல்ஸ் 100 கிராம்
  2. முட்டைகோஸ் 2 கப்
  3. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  4. பூண்டு 5 பல்
  5. வெங்காயம்-1 பொரிப்பதற்கு
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. எண்ணெய்
  8. சிவப்பு மிளகாய் 4 வறுத்து திரித்துக் கொள்ளவும்
  9. ஏக் பீஜோ செய்வதற்கு
  10. முட்டை 4
  11. வெங்காயம் ஒன்று நீட்டமாக நறுக்கியது
  12. லெமன் ஜூஸ் கால் கப்
  13. மல்லி இலை சிறிதளவு
  14. உப்பு தேவைக்கு ஏற்ப
  15. சில்லி ஃப்ளேக்ஸ் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் நூடுல்சை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. பின் அதை வடித்து ஆற வைக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்த மிளகாயை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  4. வறுத்த மிளகாய் இடித்து அல்லது அரைத்து வைத்துக் கொள்ளவும்
  5. அதே கடாயில் வெங்காயம் மற்றும் பூண்டை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  6. பின் முட்டை அதில் சேர்த்து வதக்கவும்
  7. பின் அதில் முட்டைகோஸ் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  8. இது வதங்கியதும் பொரித்து எடுத்த பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து கிளறவும்
  9. கடைசியில் வேகவைத்த நூடுல்ஸ் மற்றும் முட்டையை அதில் சேர்த்து கிளறி இறக்கவும்
  10. ஏக் பிஜோ செய்வதற்கு
  11. முட்டையை உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
  12. பின் ஒரு கடாயில் நீட்டமாக வேட்டிய வெங்காயத்தை பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  13. அவித்த முட்டையை நடுவில் கீறி லெமன் ஜூஸ் ,பொரித்த வெங்காயம், உப்பு,சில்லி பிளக்ஸ் மற்றும் மல்லி இலை ஸ்டப் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்