வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் ஹல்வா !

Photo of BEETROOT HALWA ! by Ramani Thiagarajan at BetterButter
128
0
0.0(0)
0

பீட்ரூட் ஹல்வா !

Apr-15-2019
Ramani Thiagarajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் ஹல்வா ! செய்முறை பற்றி

பீட்ரூட் ஹல்வா பண்டிகை நாட்களில் செய்யும் விஷேஷ உணவுகளில் சிறந்த உணவாகும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட்- 250 கிராம்
  2. சர்க்கரை -100 கிராம்
  3. பால் -1 கிண்ணம்
  4. ஏலக்காய் பொடி- 1 மேஜைக் கரண்டி
  5. முந்திரி - 10
  6. நெய் -1/4 கிண்ணம்

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை நன்கு கழுவி துருவிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து சிறிதளவு நெய்யில் முந்திரியை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  3. துருவிய பீட்ரூட்டை பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும் .
  4. பிறகு பால் சேர்த்து வேக விடவும்.
  5. பிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும் .
  6. நெய் சேர்த்து கிளறவும் .
  7. ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும்.
  8. நெய் பூசிய பாத்திரத்தில் பீட்ரூட் ஹல்வாவை எடுத்து வைத்து அலங்கரித்து பரிமாறவும் .
  9. சக்தியும் சுவையும் மிக்க பீட்ரூட் ஹல்வா தயார் !

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்