வெங்காயம் பூண்டு இல்லாத காய்கறி புலாவ் | No onion-No Garlic Vegetable Pulao in Tamil

எழுதியவர் Srividhya Ravikumar  |  6th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • No onion-No Garlic Vegetable Pulao recipe in Tamil,வெங்காயம் பூண்டு இல்லாத காய்கறி புலாவ், Srividhya Ravikumar
வெங்காயம் பூண்டு இல்லாத காய்கறி புலாவ்Srividhya Ravikumar
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

1359

0

Video for key ingredients

  • How to make Coconut Milk

வெங்காயம் பூண்டு இல்லாத காய்கறி புலாவ் recipe

வெங்காயம் பூண்டு இல்லாத காய்கறி புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make No onion-No Garlic Vegetable Pulao in Tamil )

  • அரிசி: 1 கப்
  • தேங்காய் பால்: 1/2 கப்
  • தண்ணீர்: 1/2 கப்
  • நறுக்கப்பட்ட கேரட்:1/4 கப்
  • பச்சைப்பட்டாணி: 1தேக்கரண்டி
  • நறுக்கப்பட்ட குடமிளாகாய்: 1/4 கப்
  • நறுக்கப்பட்ட இஞ்சி :1/4 தேக்கரண்டி
  • ஷாஜி சீரகம்: 1/4 தேக்கரண்டி
  • பிரிஞ்சி இலை:1
  • ஏலக்காய்:2
  • பச்சை மிளகாய்:3
  • கொஞ்சம் கொத்துமல்லி நறுக்கப்பட்டது
  • கொஞ்சம் புதினா இலைகள் நறுக்கப்பட்டது
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு நெய்
  • சுவைக்கேற்ற உப்பு

வெங்காயம் பூண்டு இல்லாத காய்கறி புலாவ் செய்வது எப்படி | How to make No onion-No Garlic Vegetable Pulao in Tamil

  1. அரிசியைக் கழுவி 1/2 கப் தண்ணீர் மற்றும் 1/2 கப் தேங்காய் பால் கலவையில் 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
  2. ஒரு தேக்கரண்டி எண்ணெய் 1 தேக்கரண்டி நெய்யை ஒரு கனமான அடிப்பாகமுள்ள கடாயில் சூடுபடுத்தவும். ஷாஹி சீரகம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
  3. அடுத்து பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட இஞ்சியைச் சேர்த்து வறுக்கவும்.
  4. பிறகு, நறுக்கப்பட்ட கேரட், பச்சைப் பட்டாணி சேர்க்கவும், இந்தப் பொருள்களை நன்றாகக் கலக்கவும்.
  5. இப்போது தண்ணீர் தேங்காய் பால் கலவையில ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும்
  6. சுவைக்கு உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
  7. அரிசி தண்ணீரை உறிஞ்சும்வரை மிதமானச் சூட்டில் வேகவைக்கவும்.
  8. தீயைக் குறைத்து, நறுக்கப்பட்ட குடமிளகாய், கொத்துமல்லி, புதினா இலைகளைப் போட்டு, ஒரு மூடியால் மூடி வேகவைக்கவும்.
  9. அடுப்பை நிறுத்தி சில நிமிடங்கள் அப்படியே விடவும்.
  10. உங்களுக்கு விருப்பமான எந்தவொரு பக்க உணவோடும் சூடாகப் பரிமாறவும்.

Reviews for No onion-No Garlic Vegetable Pulao in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.