சிக்கன் 65 | Chicken 65 in Tamil

எழுதியவர் Kishorah Zaufer  |  20th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Chicken 65 by Kishorah Zaufer at BetterButter
சிக்கன் 65Kishorah Zaufer
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    60

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

587

0

சிக்கன் 65 recipe

சிக்கன் 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make Chicken 65 in Tamil )

  • எலும்பில்லா சிக்கன் -500 கிராம்
  • சிவப்பு மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
  • v
  • சீரகத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம்/சான்ஃப் தூள் -1 தேக்கரண்டி
  • கரம் மசாலா - 2 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • எலுமிச்சைப்பழம் - 1/2
  • ஹங் தயிர் - 3 தேக்கரண்டி
  • சோளமாவு- 1 தேக்கரண்டி
  • உப்பு - சுவைக்கு
  • எண்ணெய் - நன்கு வறுப்பதற்கு

சிக்கன் 65 செய்வது எப்படி | How to make Chicken 65 in Tamil

  1. நன்காகக் கழுவி சுத்தப்படுத்தப்பட்ட கோழியை 2 இன்ச் துண்டுகளாக வெட்டிக்கொள்க. கட்டித் தயிரையும் சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள், சீரகத்தூள், சாஃப் தூள், கரம் மசாலா, இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில்சேர்த்து மிருதுவான சாந்தாகத் தயாரித்துக்கொள்க.
  2. இப்போது சிக்கன் துண்டுகளைச் சேர்த்து சோளமாவைத் தூவுக. எலுமிச்சம் பழத்திலிருந்து புதிதாகச் சாறு பிழிந்துகொள்ளவும் சிக்கன் துண்டுகள் மசாலா தூளினால் நன்றாகப் பூசப்படும்வரை கலக்கவும். மேரினேட் ஆக மூடி பிரிட்ஜில் வைக்கவும்.
  3. சிக்கனைப் பொரிப்பதற்கு கடாயில் போதுமான எண்ணெய் விட்டு சிக்கன் மிருதுவாகும்வரை சமைக்கவும். சமையல் உறிஞ்சியால் வடிகட்டிப் பரிமாறுக.

Reviews for Chicken 65 in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.