ஆரோக்கியமாக தானியச் சிவ்டா | Healthy Cereal Chivda in Tamil

எழுதியவர் Soniya Saluja  |  4th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Healthy Cereal Chivda recipe in Tamil,ஆரோக்கியமாக தானியச் சிவ்டா, Soniya Saluja
ஆரோக்கியமாக தானியச் சிவ்டாSoniya Saluja
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

1971

0

ஆரோக்கியமாக தானியச் சிவ்டா recipe

ஆரோக்கியமாக தானியச் சிவ்டா தேவையான பொருட்கள் ( Ingredients to make Healthy Cereal Chivda in Tamil )

 • 2 கப் சோளச் சீவல்கள் தானியம்
 • 2 கப் தானியக்கலவைச் சீரியோக்கள்
 • 2 கப் அரிசி கிரிஸ்பி தானியம்/ சாத பஃப்
 • 1 கப் வேர்கடலை/பச்சை
 • 1/2 கப் வறுத்த கடலைப் பருப்பு
 • 1/4 கப் கொப்பரைத் தேங்காய்/துருவியது
 • 1/4 கப் பாதிப்பாதி மந்திரி பருப்பு / பாதாம் பருப்பு
 • 1/4 கப் உலர் திராட்சைகள்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 தேக்கரண்டி கடுகு
 • 1/2 தேக்கரண்டி அல்லது சுவைக்கேற்ற அளவு சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • ஒரு தாராள சிட்டிகை பெருங்காயம்
 • 10 கறிவேப்பிலை இலைகள்
 • 5 பச்சை மிளகாய்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1 தேக்கரண்டி எண்ணெய்

ஆரோக்கியமாக தானியச் சிவ்டா செய்வது எப்படி | How to make Healthy Cereal Chivda in Tamil

 1. ஒரு அகலமான வானலியில்/கடாயில் எண்ணெயை மிதமானச் சூட்டுக்கும் அதிகமாகச் சூடுபடுத்திக்கொள்க. எண்ணெய் மிதமானச் சூட்டுக்கு வந்தபின் பெருங்காயம், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
 2. வெப்பத்தை மிதமான அளவிற்குக் குறைத்து கலக்கி கிட்டத்தட்ட 30 விநாடிகள் வறுக்கவும்; கடலை பருப்பு, முந்திரி பருப்பு, துருவிய கொப்பரைத் தேங்காய் சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். பொறுமையாகச் செய்யவும், முறையாக வறுக்கவில்லை என்றால், வேர்கடலை, கடலை பருப்பு பச்சை வாடை வீசும்.
 3. பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க. அரிசி மொறுமொறுப்பான தானியத்தையும் சோள சீவல்களை சீரீயோஸ்களையும் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். நன்றாகக் கலந்து அடுப்பை நிறுத்தவும்.
 4. சிவ்டா தயார். பரிமாறுவதற்கு முன் தானிய சிவ்டா அறை வெப்பத்திற்கு ஆறவிடவும். ஆரோக்கியமான தானிய சிவ்டாவைக் காற்றுப்புகா பாத்திரத்தில் பல நாட்களுக்கு வைத்துக்கொள்ளலாம்.

Reviews for Healthy Cereal Chivda in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.