வீடு / சமையல் குறிப்பு / கடலைப் பருப்பு பாயாசம்

Photo of Kadala Parupu Payasam by Nisha Ramesh at BetterButter
1671
24
0.0(0)
0

கடலைப் பருப்பு பாயாசம்

Nov-18-2015
Nisha Ramesh
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 கப் கடலைப்பருப்பு
  2. 1 தேக்கரண்டி பாசிப்பருப்பு
  3. 1/2 -3/4 கப் பொடியாக்கப்பட்ட வெல்லம்
  4. 1 தேக்கரண்டி ஏலக்காய்
  5. 2 தேக்கரண்டி வறுத்த முந்திரி பருப்பு
  6. 1.5ல் இருந்து 2 கப் காய்ச்சிய பால்

வழிமுறைகள்

  1. பொன்னிறமாக வரும்வரை பருப்பை வறுக்கவும். பருப்பை பிரஷர் குக்கரில் வேகவைத்து எடுத்துவைத்துக்கொள்க. மிருதுவாக இருக்கவேண்டும், மழமழவென்று இருக்கக்கூடாது.
  2. ஒரு கடாயில், வெல்லத்தைச் சிறிது தண்ணீர்விட்டு கரைத்துத் திரிக்கவும். திரிக்கப்பட்ட வெல்லப்பாகை ஒரு பாத்திரத்தில் எடுத்து சூடுபடுத்தவும்.
  3. கொதிக்கட்டும், அடர்த்தியாகட்டும். கம்பிப்பதம் தேவையில்லை. சற்றே அடர்த்தியாக வேண்டும், அவ்வளவுதான்.
  4. அடர்த்தியானதும், வேகவைத்த பருப்பு சேர்த்து சற்றே நசுக்கிக்கொள்ளவும். மேலும் ஒரு நமிடத்திற்கு கொதிக்கட்டும். தீயை அடக்கிவிடவும்.
  5. காய்ச்சியப் பாலை மெல்ல சேர்க்கவும். அடுப்பைப் பற்றவைத்து சற்றே குறைவாக வைத்துக்கொள்ளவும். ஒரு கொதி நிலைக்கு வரட்டும், நிறுத்திவிடுங்கள்.
  6. வறுத்த முந்திரி ஏலக்காய்த்தூளைச் சேர்த்து நன்றாக கலந்துகொள்க. அறை வெப்பத்தில் சூடாகப் பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்