கிண்ணத்தப்பம் | Kinnathappam in Tamil

எழுதியவர் Ayesha Ziana  |  11th Oct 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Kinnathappam by Ayesha Ziana at BetterButter
கிண்ணத்தப்பம்Ayesha Ziana
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

11

0

கிண்ணத்தப்பம் recipe

கிண்ணத்தப்பம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Kinnathappam in Tamil )

 • பச்சரிசி 1/4 கப்
 • கஞ்சிக்கரிசி 1/4 கப்
 • தேங்காய் 1/2 (மீடியம் சைஸ்)
 • முட்டை 1
 • சீனி 1/2 முதல் 3/4 கப்
 • ஏலம் 1 முதல் 2
 • உப்பு ஒரு பின்ச்
 • சீரகம் தேவைக்கு, மேலே தூவ
 • நெய் தட்டில் தடவ

கிண்ணத்தப்பம் செய்வது எப்படி | How to make Kinnathappam in Tamil

 1. பச்சரிசியையும் கஞ்சிக்கரிசியையும் நன்றாக அலசி 2-3 மணி நேரம் சேர்த்து ஊற வைக்கவேண்டும்.
 2. தேங்காயைத் துருவி பால் பிழியவும். கிடைக்கும் பாலில் தலை பால் 1 கப், மற்றும் 2ஆம் பால் 1 கப் உபயோகிக்க வேண்டி வரும்.
 3. ஊற வைத்த அரிசியில் உள்ள தண்ணீர் வடித்து விட்டு, மிக்ஸியில் 2ஆம் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரிசியை மை போல அரைக்க வேண்டும். இதை வடிகட்டி ஒரு பௌலில் ஊற்றவும்.
 4. முட்டையையும் சீனியையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து அதையும் பௌலில் ஊற்றவும்.
 5. தலை பால், தட்டிய ஏலக்காய், உப்பு இவற்றையும் பௌலில் சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு நீர்மத்தன்மை உடையதாக இருப்பது அவசியம்.
 6. ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் நெய் தடவி, பௌலில் உள்ள கலவையை ஊற்றி, இட்லி அண்டாவில் சிறிது தண்ணீர் ஊற்றி, ஸ்டீல் பாத்திரத்தை அதில் வைத்து, ஆவியில் முதலில் ஒரு 5 நிமிடம் வேக வைக்கவும்.
 7. பின்னர், இட்லி அண்டா மூடியைத் திறந்து, கலவை மேல் சீரகத்தைத் தூவி, மீண்டும் மூடி வைத்து மேலும் 15 நிமிடம் வேக விட வேண்டும்.
 8. பின்னர் ஸ்டீல் பாத்திரத்தை வெளியில் எடுத்து, கிண்ணத்தப்பத்தை ஆற விடவும். ஆவி தண்ணீர் மேலே படர்ந்திருந்தால் கவலை வேண்டாம், ஆறியதும் தண்ணீர் தானே வற்றி விடும்.
 9. சின்ன துண்டுகளாக்கி பரிமாறவும். சூப்பரான கிண்ணத்தப்பம் தயார். இது கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் பாரம்பரிய இஸ்லாமியர் இனிப்பு உணவுகளில் ஒன்று.

எனது டிப்:

கஞ்சிக்கரிசி கிடைக்காவிட்டால் வெறும் பச்சரிசியை வைத்தே செயலாம். வெறும் சீரக சம்பா அரிசி/ இட்லிஅரிசியும் உபயோகப்படுத்தலாம்.

Reviews for Kinnathappam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.