வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் ரசம்

Photo of Thengai Paal Rasam by Vins Raj at BetterButter
1174
4
0.0(0)
0

தேங்காய் பால் ரசம்

Oct-12-2017
Vins Raj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் ரசம் செய்முறை பற்றி

இது  புதுவையின் சிறப்பு ரசமாகும். மற்ற ரசங்களை போல அதிக பொருட்கள் இல்லாமல் வெறுமனே தேங்காய் பால், புலி, மிளகாய் மட்டுமே. இதில் தேங்காய் பாலின் தித்திப்போடு, புளியின் புளிப்புத்தன்மையோடு, மிளகாயின் காரத்தோடு ஒரு புது கலவையான சுவையை சுவைக்கலாம். செய்து பாருங்கள். இதற்க்கு எங்கள் வீட்டில் கண்டிப்பாக இறால் வறுவல்அல்லது உருளை வறுவல் இருந்தே ஆகவேண்டும்..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 கப்  முதல் தேங்காய் பால்
  2. 1 கப் இரண்டாம்  தேங்காய் பால்
  3. 1 கப் மூன்றாம்  தேங்காய் பால்
  4. சிறிய எழுமிச்சை அளவு புளி
  5.  1/4 தே.க.மஞ்சள் தூள்
  6. 1/4 தே.க.கடுகு
  7.  1/4 தே.க.உடைத்த வெள்ளை உளுந்து
  8.  1/4 தே.க.பெருங்காயம்
  9. 1 கொத்து கருவேப்பிலை
  10. 6 காய்ந்த சிவப்பு மிளகாய்
  11. 1 தே.க. எண்ணெய்

வழிமுறைகள்

  1.   3 வகையான தேங்காய் பாலை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும்
  2. புளியை கரைத்து புளிக்கரைசலை எடுத்துக்கொள்ளவும்
  3. மூன்றாம் தேங்காய் பாலை புளிக்கரைசலுடன்சேர்க்கவும்.
  4. அதனுடன் மஞ்சள் தூள், தேவையான உப்புசேர்க்கவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய்காய்ந்தும், கடுகு பொறிக்க விட்டு, உளுந்தப்பருப்பு , பெருங்காயம் மற்றும் காய்ந்த  சிவப்பு  மிளகாயை இரண்டாக கிள்ளி எண்ணையில் போடவும். இதனுடன் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  6.   இப்போது தேங்காய் புளி கரைசலை சேர்த்துகொதிக்க விடவும். மொத்த அளவு பாதியாககுறையும் வரை  கொதிக்க விடவும்.
  7. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற விடவும்.
  8. ஆறின பிற்பாடு முதல் மற்றும், இரண்டாம் தேங்காய் பாலை சேர்த்து கலக்கிவிடவும்.
  9. சுவையான தேங்காய் பால் ரசம்  தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்