வீடு / சமையல் குறிப்பு / ப்ரெட் தக்காளி டோஸ்ட்

Photo of Bread tomato toast by Asiya Omar at BetterButter
618
3
0.0(0)
0

ப்ரெட் தக்காளி டோஸ்ட்

Oct-19-2017
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ரெட் தக்காளி டோஸ்ட் செய்முறை பற்றி

ப்ரெட், முட்டை, தக்காளி சேர்த்து செமையாக இருக்கும் இந்த டோஸ்ட்.

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை கொண்டாட்டம்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் சிறிய சைஸ் துண்டுகள் - 8
  2. முட்டை- 2
  3. எண்ணெய் நெய் கலவை - 2 டேபிள்ஸ்பூன்
  4. கொர கொரப்பாக அரைக்க:-
  5. பெரிய தக்காளி - 2
  6. வெங்காயம் - 1
  7. பச்சை மிளகாய் - 1
  8. மிளகு,சீரகத்தூள் - தலா அரைடீஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரைடீஸ்பூன்
  10. கரம் மசாலா - சிறிது.
  11. மல்லி இலை,கறிவேப்பிலை - சிறிது
  12. உப்பு - சுவைக்கு சிறிது.

வழிமுறைகள்

  1. முதலில் கொர கொரப்பாக அரைக்க சொன்னவற்றை அரைத்து ஒரு அகலமான பவுலில் எடுக்கவும்.
  2. அத்துடன் முட்டை, சுவைக்கு சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ப்ரெட்டும் தயாராக இருக்கட்டும்.
  3. தவாவில் எண்ணெய் நெய் சேர்த்து சூடானவுடன் ப்ரெட்டை முட்டை கலவையில் முக்கி தவாவில் போடவும்
  4. இரு புறமும் பொன்னிறமாக சிவக்க டோஸ்ட் செய்து எடுக்கவும்.
  5. சுவையான ப்ரெட் தக்காளி டோஸ்ட் தயார். இதை அப்படியே சாப்பிடலாம். பிரியப்பட்டால் மிந்த் சட்னியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்