வீடு / சமையல் குறிப்பு / Tirunelveli halwa

Photo of Tirunelveli halwa by Natchiyar Sivasailam at BetterButter
7
7
0.0(2)
1

Tirunelveli halwa

Oct-24-2017
Natchiyar Sivasailam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • முட்டை இல்லா
 • மீடியம்
 • பண்டிகை காலம்
 • தமிழ்நாடு
 • டெஸர்ட்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. சம்பா கோதுமை 1 கப்
 2. சர்க்கரை 3 கப்
 3. நெய் 2 கப்
 4. முந்திரிப் பருப்பு 25 கி.

வழிமுறைகள்

 1. சம்பா கோதுமையைக் கழுவி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
 2. காலையில் ஊறிய கோதுமையை மிக்சியில் அரைத்து 3 முறை பால் எடுத்து வைக்கவும்.
 3. கோதுமைப் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூடி வைக்கவும்.
 4. மாலையில் கோதுமைப் பால் தெளிந்து மேலே தண்ணீராகவும் அடியில் திக்கான பாலாகவும் இருக்கும்.
 5. தெளிந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து விடவும்.
 6. திக்கான பாலைத் தனியே வைக்கவும்.
 7. முதலில் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
 8. அடி கனமான வாணலியில் 3 கப் சர்க்கரை 1 கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும்.
 9. பாகு பிசுக்கு பதம் வந்ததும் கோதுமைப் பாலைச் சேர்க்கவும்.
 10. கை விடாமல் கிளறவும்.
 11. சர்க்கரைப் பாகும் கோதுமைப் பாலும் ஒன்று சேர்ந்து வரும் பொழுது 1 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றவும்.
 12. இன்னொரு வாணலியில் இரண்டு டீஸ்பூன் நெய், இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கேரமலைஸ் செய்யவும்.
 13. சர்க்கரை நன்கு கரைந்து பிரவுன் கலர் ஆனதும் அதை அல்வாவில் சேர்க்கவும்.
 14. நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை சேர்க்கவும்.
 15. அவ்வப்போது நெய் சேர்த்துக் கை விடாமல் கிளறவும்.
 16. நெய் முழுவதும் ஊற்றிக் கிளறிய பின்னர் ஊற்றிய நெய் முழுவதும் அல்வாவிலிருந்து வெளியேற ஆரம்பிக்கும்.
 17. இந்த சமயத்தில் அல்வாவை அடுப்பிலிருந்து இறக்கி வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
 18. அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sankari Satchu
Oct-25-2017
Sankari Satchu   Oct-25-2017

Nice

Ravi Balasubramanian
Oct-24-2017
Ravi Balasubramanian   Oct-24-2017

Nice recipe

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்