வீடு / சமையல் குறிப்பு / திருவையாறு அசோக அல்வா

Photo of Thiruvaiyar ashoka halwa by Thiyonila Xavier at BetterButter
525
5
0.0(0)
0

திருவையாறு அசோக அல்வா

Oct-24-2017
Thiyonila Xavier
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

திருவையாறு அசோக அல்வா செய்முறை பற்றி

தஞ்சை மாவட்டம் திருவையாறில் பிரசித்தி பெற்ற இனிப்பு அசோக அல்வா... அங்கு நடக்கும் விழாக்களில் இதற்க்கென தனி இடமுண்டு்.... கோதுமை அல்வா மாதிரி இதை தயாரிக்க நீண்ட நேரமாகாது.. பாசிபருப்பில் செய்வதால் மிகவும் ஆரோக்கியமானது... இதை திருவையாறு அல்வா எனவும் அழைப்பர்...

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிபருப்பு: 1/4 கோப்பை (கப்)
  2. கோதுமை மாவு: 1/8 கோப்பை(கப்)
  3. வெள்ளை சர்க்கரை: 1/2 கோப்பை(கப்)
  4. நெய்:1/4 கோப்பை (கப் )+ தேவைக்கேற்ப
  5. முந்திரி பருப்பு : 7-10
  6. பாதம்:4-5(விருப்பப்பட்டால்)
  7. உலர் திராட்சை: 10 (விருப்பப்பட்டால்)
  8. ஏலக்காய் தூள்:1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை வாசனை வரும்வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்
  2. பருப்பை கழுவி 3/4 கோப்பை (கப் ) தண்ணீர் சேர்த்து ப்ரெஷர் குக்கரில் 3-4 சத்தத்திற்கு வேக வைக்கவும்..
  3. பருப்பு வெந்தவுடன் அதை ஆறவைத்து மின் மிக்சியில் அரைத்து எடுக்கவும்..
  4. கடாயில் பாதியளவு நெய் விட்டு பாதம்,முந்திரி,உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்..
  5. பிறகு அதே நெய்யில் கோதுமை மாவை சேர்த்து வாசனை வரும் வரை அல்லது மிக சிறிய நிறமாற்றம் வரும்வரை வறுக்கவும்.
  6. பிறகு அதில் அரைத்த பருப்பை சேர்க்கவும்.. கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
  7. பருப்பும் மாவும் நன்றாக கலந்தவுடன் அதில் 1/2 கோப்பை (கப்) வெள்ளை சர்க்கரை சேர்க்கவும்.
  8. சர்க்கரை சேர்த்தபின் அல்வா இலகி வரும். கைவிடாமல் அவ்வப்போது சிறிது நெய் விட்டு கிளறுங்கள்.
  9. சிறிது நேரத்தில் அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் பிரிந்து வரும் அப்போது அதில் ஏலக்காய் தூள் மற்றும் வருத்த முந்திரி, திராட்சை மற்றும் மீதியுள்ள நெய் சேர்த்து இறக்கவும்.
  10. சுவையான அசோக அல்வா தாயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்