வீடு / சமையல் குறிப்பு / நாஞ்சில் நேந்திரன் பழக்கூழ்

Photo of Nanjil Nendran Pazhakkoozh by Ayesha Ziana at BetterButter
664
3
0.0(0)
0

நாஞ்சில் நேந்திரன் பழக்கூழ்

Oct-29-2017
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நாஞ்சில் நேந்திரன் பழக்கூழ் செய்முறை பற்றி

நேந்திரன் பழத்தை வைத்து நாகர்கோவில் வட்டாரத்தில் செய்யப்படும் இனிப்பான டிபன் சைட் டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நேந்திரன் பழம் 1
  2. தேங்காய்ப்பால் உத்தேசமாக 1/2 கப்
  3. தேங்காய்ப்பால்(2ஆம்+3ஆம் பால் ) உத்தேசம் 1 1/4 கப்
  4. அரிசிமாவு 3 டேபிள் ஸ்பூன் அல்லது தேவைக்கு
  5. சீனி 5 முதல் 7 டேபிள் ஸ்பூன்
  6. நெய் 1 டேபிள் ஸ்பூன்
  7. ஏலக்காய் 1

வழிமுறைகள்

  1. பழத்தை நேர்பாதியாகக் கீறி, சின்ன சதுரங்களாக வெட்டி , 2ஆம்+3ஆம் பாலில் வேக வைக்கவும்.
  2. சீனி சேர்த்து கரைந்ததும், அரிசி மாவை சிறிது தண்ணீரில் குழைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
  3. இறுகி வந்தவுடன், தலை பால் சேர்த்து, கூழ் பதத்திற்கு வரும் வரை கிளறவும்
  4. இறுதியாக தட்டிய ஏலக்காய், மற்றும் நெய் சேர்த்து கிளறி இறக்கிப் பரிமாறவும்.
  5. மிகவும் சுவையான நாஞ்சில் நேந்திரன் பழக்கூழ் தயார். இது புட்டு, இடியாப்பம், ஓட்டாடை, பாலாடை போன்றவற்றிற்கு சைட் டிஷ்ஷாக குமரிமாவட்ட இசுலாமியர்கள் செய்வார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்