வீடு / சமையல் குறிப்பு / நச்சு கொட்டை கீரை கார குழம்பு

Photo of Nachu kottai keerai kuzhambu by ambika ma at BetterButter
2619
5
0.0(0)
0

நச்சு கொட்டை கீரை கார குழம்பு

Oct-30-2017
ambika ma
6 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நச்சு கொட்டை கீரை கார குழம்பு செய்முறை பற்றி

நம் பாரம்பரிய /கிராமிய குழம்பு வகை.கிராமங்களில் வயல் ,வேலி ஓரங்களில் முளைத்த மருத்துவ குணம் கொண்ட கீரையை உணவில் சேர்த்துக் கொண்டார்கள்.அப்படி பட்ட ஒரு செடி/மரத்தின் இலையை வைத்து செய்யும் குழம்பு.நச்சு கெட்ட(இல்லாத/அறுக்கும்) கீரை .நம் உடலில் உள்ள நச்சு/வாயு அகற்றி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புளி -நெல்லி அளவு
  2. பூண்டு -1 அல்லது 2
  3. சின்ன வெங்காயம்-1கப்
  4. நச்சு கொட்டை கீரை-10-12
  5. தக்காளி-1பெரியது
  6. கடுகு-1\4 தே.க
  7. சீரகம்-1/4தே.க
  8. வெந்ததயம்-1/4தே.க
  9. பெருங்காயம்-சிட்டிகை
  10. மஞ்சள்-சிட்டிகை
  11. கறிவேப்பிலை-சிறிதளவு
  12. சாம்பார் பொடி-1 1/2தே..க (சுவைக்கு ஏற்ப)
  13. உப்பு- சுவைக்கு ஏற்ப
  14. தண்ணீர்-தேவையான அளவு
  15. எண்ணெய்-3-4,மே.க

வழிமுறைகள்

  1. புளியை நீரில் ஊற வைக்கவும். கீரையை கழுவி அதன் நரம்பை எடுத்து நறுக்கி கொள்ளவும். தக்காளி, வெங்காயம் இவற்றையும் நறுக்கி கொள்ளவும்.
  2. 4-5 பூண்டுடன் பற்கள் சேர்த்து நறுக்கிய கீரையுடன நன்றாக தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு பொரித்த உடன் சீரகம்,பெருங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய வெங்காயமும்,மீதம் உள்ள பூண்டு பற்கள் சேர்த்து நன்கு. வதக்கவும்.
  4. இதனுடன் நறுக்கிய தக்காளி ,உப்பு,மஞ்சள், சாம்பார் பொடியையும் சேர்த்து வதக்கவும்..2-3 நிமிடங்கள் கழித்து அறைத்த கீரை விழுதையையும் சேர்த்து வாசம் வரும் வரை நன்கு வதக்கவும்.
  5. பிறகு புளி தண்ணீர் சேர்த்து நன்கு எண்ணெய் வரும் வரை அடி பிடிக்காது கிளறி இறக்கவும்.
  6. அது சுடு சாதத்தில் இட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.இட்லி .தோசைக்கும் மிக நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்