வீடு / சமையல் குறிப்பு / நாஞ்சில் சாளை மிளகும் புளியும் கறி வித் தேங்காய் ஆணம்

Photo of Nanjil Sardines Milagum Puliyum Curry with Coconut Curry by Ayesha Ziana at BetterButter
115
3
0.0(0)
0

நாஞ்சில் சாளை மிளகும் புளியும் கறி வித் தேங்காய் ஆணம்

Oct-30-2017
Ayesha Ziana
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நாஞ்சில் சாளை மிளகும் புளியும் கறி வித் தேங்காய் ஆணம் செய்முறை பற்றி

நாகர்கோவில் ஸ்பெஷல் சாளை மீனை தேங்காய் சேர்க்காமல் செய்த கறி. அதன் இணை பிரியா துணை கறி தேங்காய் ஆணம். இரண்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • மீடியம்
 • தினமும்
 • தமிழ்நாடு
 • சிம்மெரிங்
 • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. சாளை கறி செய்ய: சாளை மீன் 10
 2. சின்ன வெங்காயம் 20
 3. புளி பெரிய எலுமிச்சை அளவு
 4. உப்பு தேவைக்கு
 5. மிளகாய் தூள் 3 ஸ்பூன்
 6. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
 7. பெருஞ்சீரக தூள் 2 1/2 ஸ்பூன்
 8. மல்லி தூள்(தேவைப்பட்டால்) 2 ஸ்பூன்
 9. மிளகு தூள் 1 ஸ்பூன்
 10. கடுகு 1 ஸ்பூன்
 11. கறிவேப்பிலை 1 கொத்து
 12. நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
 13. தேங்காய் ஆணம் செய்ய: துருவிய தேங்காய் 6 ஸ்பூன்
 14. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
 15. மஞ்சள் தூள் 1/3 ஸ்பூன்
 16. பெருஞ்சீரகம் 1 ஸ்பூன்
 17. சின்ன வெங்காயம் 5
 18. உப்பு தேவைக்கு
 19. எண்ணெய் 2 ஸ்பூன்
 20. கடுகு 1 ஸ்பூன்
 21. கறிவேப்பிலை 1 ஸ்பூன்
 22. தண்ணீர் தேவைக்கு

வழிமுறைகள்

 1. சாளை கறி செய்ய: வாணலியில் சாளை மீன், ஊற வைத்து கரைத்த புளி தண்ணீர், உப்பு சேர்த்து 15 நிமிடம் வைக்கவும்.
 2. பின்னர் அடுப்பு பற்றி, வாணலியை வைத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், பெருஞ்சீரக தூள், மிளகு தூள் அத்தனையும் சேர்த்து கலந்து, மிதமான தீயில் மூடி வேக வைக்கவும்.(திக்காக விரும்புபவர்கள் மட்டும் மல்லித்தூள் சேர்க்கவும்)
 3. மீன் ஓரளவு வெந்ததும், மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடவும். பின்னர் இதை மீன் கலவையில் கொட்டி, லேசாக கிளறி, சிம்மில் வைத்து மேலும் 5 நிமிடங்கள் மூடி வேக விடவும். சுவையான சாளை மீன் மொளவும் புளியும் கறி தயார். இதை சாதம், அரிசிமாவு ரொட்டி இவற்றுடன் சேர்த்து சாப்பிடுவார்கள்.
 4. தேங்காய் ஆணம் செய்ய: மிக்ஸியில் தேங்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருஞ்சீரகம், சின்ன வெங்காயம், சிறிது தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
 5. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த கலவை, தண்ணீர், உப்பு சேர்த்து, ஓரங்களில் பதைக்க தொடங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். கொதிக்க விட கூடாது. அருமையான தேங்காய் ஆணம் தயார். இது ரசம் மாதிரி ஒரு துணை கறி ஆகும்.
 6. மிளகும் புளியும் கறி காரம், புளிப்பு எல்லாம் தூக்கலாக கொண்டிருக்கும். அதை கிரேவி மாதிரி சாதத்தில் நிறைய ஊற்ற முடியாது. எனவே கட்டாயம் தேங்காய் ஆணம் சேர்த்து சாப்பிடுவது நாஞ்சில் மக்கள் வழக்கம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்