வீடு / சமையல் குறிப்பு / தூதுவளை ரசம்

Photo of Thuthuvalai rasam by saranya sathish at BetterButter
1768
5
0.0(0)
0

தூதுவளை ரசம்

Nov-03-2017
saranya sathish
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தூதுவளை ரசம் செய்முறை பற்றி

தூதுவளை கீரையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். தூதுவளை ரசம் இருமல், சளிக்கு மிகவும் நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தூதுவளை இலை - 1 கப் அல்லது தூதுவளை பொடி - 2 டேபிள் ஸ்பூன்
  2. புளி - சிறிய எலுமிச்சைப்பழ அளவு
  3. தக்காளி - 1
  4. ரசம் பொடி - 2 ஸ்பூன்
  5. பூண்டு - 5 பல்
  6. பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் - 2
  8. எண்ணெய் - 1 ஸ்பூன்
  9. மல்லி இலை ,கருவேப்பிலை - சிறிதளவு
  10. கடுகு - 1 ஸ்பூன்
  11. உப்பு - தேவையான அளவு
  12. மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும். பின் தேவையான நீர் சேர்க்கவும். புளியைக் கரைத்து தண்ணியை வடிகட்டி அரைத்த தக்காளியுடன் சேர்க்கவும்.
  2. தேவையான அளவு உப்பு, ரசம் பொடி, பெருங்காய பொடி, மஞ்சள் பொடி சேர்க்கவும். சிறிது கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகை போட்டு தாளித்து, நசுக்கிய பூண்டு, மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. பின் நெய்யில் வதக்கிய தூதுவளை இலை, ரசம் கலவையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
  5. இதை சூப்பாகவும் குடிக்கலாம் அல்லது ரசமாக சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்