வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு லாலிபாப்

Photo of Ragi Lollipop by Ayesha Ziana at BetterButter
551
2
0.0(0)
0

கேழ்வரகு லாலிபாப்

Nov-10-2017
Ayesha Ziana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு லாலிபாப் செய்முறை பற்றி

கேழ்வரகு மாவில் செய்த இனிப்பு லாலிபாப்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு மாவு 1/2 கப்
  2. துருவிய தேங்காய் 1/8 கப்
  3. வெல்லம் 1/4 முதல் 1/3 கப்
  4. முந்திரி 10
  5. நெய் 2 ஸ்பூன்
  6. வெண்ணெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. வெல்லத்தைக் கல்லில் வைத்து மை போல பொடித்து கொள்ளவும். முந்திரியையும் தனியாக கல்லில் வைத்து ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
  2. வாணலியில் நெய் ஊற்றி பொடித்த முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். அடுத்து தேங்காய் போட்டு அதையும் பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  3. பின்னர் அதே நெய்யில் ராகி மாவு சேர்த்து சிம்மில் 5 நிமிடங்கள் அல்லது நன்றாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
  4. ஒரு பவுலில் பொடித்த வெல்லம், முந்திரிப்பொடி, தேங்காய், ராகி மாவு அனைத்தும் சேர்த்து கலந்து வைக்கவும்.
  5. அடுப்பில் வெண்ணெய் உருக்கி கொஞ்சம் கொஞ்சமாக பவுலில் சேர்த்து பிசையவும். மாவு பளபளப்பாக உருண்டை பிடிக்கும் அளவு வந்ததும் வெண்ணெய் நிறுத்தி விடவும். உத்தேசம் 5,6 ஸ்பூன் வெண்ணெய் வரை தேவைப்படலாம்.
  6. பின்னர், சூட்டுடனேயே மாவை சின்ன உருண்டைகளாக உருட்டி டூத் பிக் சொருகி தட்டில் வைக்கவும்.
  7. உத்தேசம் 1 மணி நேரத்துக்கு பின்னர், உருண்டைகள் டூத்பிக்கில் கெட்டியாக பிடித்து, தலைகீழே கவிழ்த்தாலும் கீழே விழாமல் இருக்கும்.
  8. அருமையான கேழ்வரகு லாலிபாப் தயார். இது குழந்தைகளுக்கு காலை/மாலை நேரப் பண்டமாக கொடுக்க ஏற்றது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்