வீடு / சமையல் குறிப்பு / ஒயிட் சாஸ் மட்டன் வெஜ் சாண்ட்விச்

Photo of White Sauce Mutton Veg Sandwich by Ayesha Ziana at BetterButter
431
2
0.0(0)
0

ஒயிட் சாஸ் மட்டன் வெஜ் சாண்ட்விச்

Nov-13-2017
Ayesha Ziana
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஒயிட் சாஸ் மட்டன் வெஜ் சாண்ட்விச் செய்முறை பற்றி

ஒயிட் சாஸ், மட்டன், காய்கறிகள் சேர்த்து செய்த அடுக்கு சாண்ட்விச்.

செய்முறை டாக்ஸ்

 • மீடியம்
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • ரோசஸ்டிங்
 • ஸாட்டிங்
 • ஸ்நேக்ஸ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

 1. கோதுமை பிரட் 2
 2. வெங்காயம் 1
 3. தக்காளி 1
 4. சீஸ் ஸ்லைஸ் 1
 5. பட்டர் 2 ஸ்பூன்
 6. ஒயிட் சாஸ் செய்ய:
 7. பட்டர் 2 ஸ்பூன்
 8. சோள மாவு 2 ஸ்பூன்
 9. காய்ச்சிய/காய்ச்சாத பால் 1/3 கப்
 10. உப்பு சிறிது
 11. மிளகு தூள் 1 ஸ்பூன் அல்லது தேவைக்கு
 12. கேரட் 1
 13. பீன்ஸ் 2
 14. வேக வைத்த மட்டன் 6-8 துண்டுகள்

வழிமுறைகள்

 1. ஒயிட் சாஸ் செய்ய: முதலில் ஒரு நான்ஸ்டிக் பேனில் 1 ஸ்பூன் பட்டர் போட்டு உருகியதும், பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் சேர்த்து லேசாக வதக்கி, தண்ணீர் 1/4 கப் ஊற்றி, சிம்மில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை வேக விடவும். தனியாக எடுத்து வைக்கவும்.
 2. மீண்டும் ஒரு ஸ்பூன் பட்டர் போடவும். பாலில் சோள மாவைக் கரைத்து வைத்து, பட்டர் உருகியதும் இதை சேர்க்கவும். கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். உப்பு, மிளகு தூள் சேர்க்கவும். பாஸ்தாவுக்கு செய்யும் ஒயிட் சாஸ் போல் நீர்மமாக இல்லாமல், நன்றாக இறுகி வர வேண்டும்.
 3. சாஸ் சரியான பதம் வந்ததும், கேரட் பீன்ஸ், வேக வைத்து சிறு துண்டுகளாக்கிய மட்டன் இவற்றை சேர்த்துக் கிளறி இறக்கவும். ஒயிட் சாஸ் தயார்.(மட்டன் துண்டுகளை மட்டன் குழம்பில் இருந்து எடுக்கலாம். அல்லது தனியாக மட்டனை இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 8 விசில் வேக வைத்து எடுக்கலாம்).
 4. சாண்ட்விச் செய்ய: பேனில் 2 ஸ்லைஸ் பிரட்டை 1 ஸ்பூன் பட்டர் ஊற்றி ஒரு பக்கம் மட்டும் ரோஸ்ட் பண்ணி எடுக்கவும்.
 5. ஒரு தட்டில், முதலில் ஒரு பீஸ் பிரட்டை வைக்கவும்(ரோஸ்ட் செய்த பக்கம் அடியில்). பின் அதன் மேல் சிறிது பட்டர் தேய்த்து, ஒயிட் சாஸ் கலவையை சமமாக பரத்தவும்.
 6. பின், ஒரு சீஸ் ஸ்லைஸ் வைத்து, அதன் மேலே வெங்காயம் மற்றும் தக்காளி ஸ்லைஸ்களை அடுக்கவும்.
 7. பின் இன்னொரு பிரட்டில் ரோஸ்ட் செய்யாத பக்கம் பட்டர் தடவி, அதையும் வைக்கவும். (ரோஸ்ட் செய்த பக்கம் மேலே இருக்க வேண்டும்).
 8. சுவையான சாண்ட்விச் தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வீட்டுப் பொருட்களை வைத்து செய்வதால் ஆரோக்கியமானதும் கூட.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்