வீடு / சமையல் குறிப்பு / பச்சைப்பட்டாணி பேடா

Photo of Green Peas Peda by Hameed Nooh at BetterButter
812
3
0.0(0)
0

பச்சைப்பட்டாணி பேடா

Nov-15-2017
Hameed Nooh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பச்சைப்பட்டாணி பேடா செய்முறை பற்றி

கூட்டு, புலாவ் மற்றும் சூப்பில் மட்டுமே பச்சைப்பட்டாணியை நாம் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அதிலே இந்த இனிப்பு வகையும் செய்யலாம். இதன் அழகிய நிறத்திற்காகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை பட்டாணி - 1/2 கப்
  2. இனிப்பில்லாத கோயா -1/4 கப்
  3. காய்ந்த தேங்காய்ப்பூ- 1/4 கப்
  4. சக்கரை - 1/2 கப்
  5. ஏலக்காய் தூள் - 1 மேசைக்கரண்டி
  6. வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  7. பாதாம் பிஸ்தா - 3 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பச்சை பட்டாணியை வேக வைத்து மையாக அரைத்து கொள்ளவும்.
  2. கடாயில் 1 மேசைக்கரண்டி வெண்ணெய் போட்டு சூடானதும் கோயாவை சேர்த்து சற்று நிறம் மாறும் வரை கிளறவும்.
  3. அத்துடன் சீனி ஏலக்காய் தூள் பொடித்த பாதாம் பிஸ்தா சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும்.
  4. மற்றொரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் போட்டு சூடானதும் அரைத்து வைத்த பச்சை பட்டாணியை சேர்த்து கிளறவும்.
  5. கெட்டியானதும் கோயா  கலவையை அதோடு சேர்த்து திரண்டு வரும் வரை 5 நிமிடங்கள் கிளறவும்.
  6. அடுப்பை அணைத்து ஆறியதும் கையில் எண்ணெய் தடவி பீடா வடிவில் பரப்பி மேலே சிறிய குழி போல் செய்து அதிலே நறுக்கிய பாதாம் பிஸ்தா வைத்து அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்