வீடு / சமையல் குறிப்பு / கேரட் ஆரஞ்சு ஜீஸ்

Photo of Carrot Orange Juice by Hameed Nooh at BetterButter
423
3
0.0(0)
0

கேரட் ஆரஞ்சு ஜீஸ்

Nov-15-2017
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் ஆரஞ்சு ஜீஸ் செய்முறை பற்றி

ஜுஸ் என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான். ஆனால் கேடு விளைவிக்கும் புட்டியில் நிரப்பியதை வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாக ஒரே நேரத்தில் காய்கறி மற்றும் பழத்தின் நன்மையைப் பெற இந்த ஜுஸை பருக்கக்கொடுத்தால் ஆர்வமாக பருகுவார்கள்.. கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது நல்ல ஓர் பானம் ஏனென்றால் கேரட் சேர்ந்து இருப்பதை கண்டு பிடிக்கவே முடியாது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் - 3
  2. ஆரஞ்சு பழம் - 2
  3. இஞ்சி - சிறிய துண்டு
  4. எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி
  5. சக்கரை - தேவையான அளவு
  6. தண்ணீர் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேரட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவிக் கொள்ளவும்.
  2. ஆரஞ்சு பழத்தில் தோல் மற்றும் விதை நீக்கவும்.
  3. அவ்விரண்டையும் சக்கரை, இஞ்சி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ப்ளண்டரில் போட்டு நன்றாக அடிக்கவும்.
  4. பிறகு அதனை வடிகட்டி சாறெடுத்து எலுமிச்சை சாறு சேர்த்து விருப்பப்பட்டால் கொஞ்சம் குளிரூட்டி கொடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்