வீடு / சமையல் குறிப்பு / பனீர் புர்ஜி சான்ட்விச்

Photo of Paneer burji sandwich by Krishnasamy Vidya Valli at BetterButter
429
3
0.0(0)
0

பனீர் புர்ஜி சான்ட்விச்

Nov-15-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பனீர் புர்ஜி சான்ட்விச் செய்முறை பற்றி

எப்போது உருளைகிழங்கை வைத்தே சான்ட்விச் செய்வதற்கு பதிலாக பனீரை கொண்டு செய்யப்படுவது இது. இதை தோசை யிலும் ஸ்டப்ஃ செய்து சாப்பிடலாம் அல்லது சப்பாத்திக்கு சப்ஜியாகவும் தொட்டுக்கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சான்ட்விச் பிரட் - 6
  2. வெங்காயம் - 1 பெரியது
  3. தக்காளி - 1
  4. பச்ச மிளகாய் - 1
  5. பனீர் - 150 கிராம்ஸ்
  6. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  7. நெய் - 2 தேக்கரண்டி
  8. உப்பு - 3/4 தேக்கரண்டி
  9. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  10. கரம் மசாலா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  11. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 2 தேக்கரண்டி
  12. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  13. வெண்ணெய் - 2 தேக்கரண்டி (பிரட் லில் தடவி டோஸ்ட் செய்வதற்கு )

வழிமுறைகள்

  1. வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. பனீர் துருவிக்கொள்ளவும்
  4. கடாயில் நெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் பச்ச மிளகாய் வதக்கவும்
  5. பச்ச வாசனை போனவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்
  6. தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. பாதி வதங்கியதும் உப்பு காஷ்மீர் சில்லிபவுடர் கரம் மசாலா சேர்க்கவும்
  8. துருவிய பனீர் சேர்த்து கிளறவும்
  9. கொத்தமல்லி இலை தூவினால் பனீர் புர்ஜி ரெடி
  10. பிரட்டில் வெண்ணெய் தடவி பனீர் புர்ஜி ஸ்டப்ஃ செய்து டோஸ்டரில் டோஸ்ட் செய்து எடுக்கவும் அல்லது தோசை கல்லில் வாட்டி எடுக்கவும். சுவையான பனீர் புர்ஜி சான்ட்விச் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்