வீடு / சமையல் குறிப்பு / ராகி சேமியா வெஜிடபிள் குழிப்பணியாரம்.

Photo of Ragi semia kuzhipaniyaram by Rajee Swaminathan at BetterButter
513
4
0.0(0)
0

ராகி சேமியா வெஜிடபிள் குழிப்பணியாரம்.

Nov-17-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ராகி சேமியா வெஜிடபிள் குழிப்பணியாரம். செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான உணவுப்போட்டி பதிவு 11

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ராகி மாவு 100கி
  2. கேரட் 100 கி
  3. பீன்ஸ் 100 கி
  4. உருளைக்கிழங்கு 100 கி
  5. பெரிய வெங்காயம் 2
  6. மிளகாய் 2.
  7. கடுகு தாளிக்க
  8. கருவேப்பிலை சிறிதளவு.
  9. இஞ்சி தேவையான அளவு.
  10. கரைத்த கோதுமைமாவு 1 கப்
  11. அவல் பொடி அரை கப்.
  12. நல்லெண்ணெய் தேவையான அளவு.
  13. உப்பு தேவையான அளவு.

வழிமுறைகள்

  1. ராகி மாவை நீர் விட்டு பிசைந்து இடியாப்ப உலக்கில் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும்.
  2. பின் காய்கறிகளை நறுக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து காய்கறிகளை போட்டு வதக்கவும்.
  4. பின் உப்பு போட்டு கிளறவும்.
  5. பின் உருண்டையாக உருட்டி கரைத்த கோதுமைமாவில் முக்கி அவல் பொடியில் பிரட்டி குழிப்பணியாரச் சட்டியில் போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
  6. சத்தான ,குழந்தைகளுக்கு பிடித்த மாலை நேர சிற்றுண்டியாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்