வீடு / சமையல் குறிப்பு / பேரிச்சம்பழ கேரட் கேக் ( குக்கரில் )

Photo of Homemade dates and carrot cake in cooker by Geetha Sivanesan at BetterButter
579
2
0.0(0)
0

பேரிச்சம்பழ கேரட் கேக் ( குக்கரில் )

Nov-18-2017
Geetha Sivanesan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பேரிச்சம்பழ கேரட் கேக் ( குக்கரில் ) செய்முறை பற்றி

ஒரு பாத்திரத்தில் மைதா பேக்கிங் சோடா உப்பு சேர்த்து சலித்து கொள்ளவும். ஒரு நான்ஸ்டிக் பானில் சக்கரையை சேர்த்து கேரமல் செய்யாவும். கேரமல் பிரவுன் கலரில் வந்ததும் அதில் சூடான தண்ணீர் சேர்த்து இறக்கி ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் முட்டை அடித்து கொள்ளவும் அதில் பொடித்த சக்கரை சேர்க்கவும். பின் சலித்த மாவு சேர்க்கவும்.இதை கலந்து பின் நறுக்கிய டேட்ஸ் துருவிய கேரட் 2 தேக்கரண்டி மைதா மாவு சேர்த்து பிசைந்து அதையும் கலக்கவும். கேரமல் ஊற்றவும் அனைத்தும் கெட்டியாக கரைத்து ஒரு பாத்திரத்தில் வெண்ணை தடவி அதில் இந்த கலவையில் ஊற்றவும் ரெண்டு முறை தட்டவும். குக்கர் இல் உப்பு கொட்டி 10 நிமிடம் சிமில் வைக்கவும். கஸ்கெட் வெயிட் எடுத்து விடவும். 10 நிமிடம் கழித்து ஒரு பாத்திரம் வைத்து அதனுள் இந்த வெண்ணை தடவிய பாத்திரம் வைக்கவும். குக்கர் மூடி 40 நிமிடம் சிமில் வைத்து இறக்கவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1/2 கப+ (2 டீஸ்பூன்)
  2. சக்கரை (கேரமல் செய்ய) 1/4 கப்
  3. பொடித்த சக்கரை 1/4 கப்
  4. பேரிச்சம் பழம் (நறுகியது) 1/4 கப்
  5. கேரட் துருவல் 1/4 கப்
  6. எண்ணெய் 1/4 கப்
  7. தண்ணீர் 1/4 கப்
  8. பேக்கிங் சோடா 1/4 டீஸ்பூன்
  9. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1 டீஸ்பூன்
  10. உப்பு ஒரு சிட்டிகை
  11. முட்டை 1

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து சலித்து கொள்ளவும். ஒரு நான்ஸ்டிக் பானில் சக்கரையை சேர்த்து கேரமல் செய்யவும்.
  2. கேரமல் பிரவுன் கலரில் வந்ததும் அதில் சூடான தண்ணீர் சேர்த்து இறக்கி ஆறவிடவும்.
  3. ஒரு பாத்திரத்தில் முட்டை அடித்து கொள்ளவும் அதில் பொடித்த சக்கரை எண்ணெய் சேர்க்கவும்.
  4. பின் சலித்த மாவு சேர்க்கவும்.இதை கலந்து பின் நறுக்கிய டேட்ஸ் துருவிய கேரட் 2 தேக்கரண்டி மைதா மாவு சேர்த்து பிசைந்து அதையும் கலக்கவும்.
  5. கேரமல் ஊற்றவும் அனைத்தும் கெட்டியாக கரைத்து ஒரு பாத்திரத்தில் வெண்ணை தடவி அதில் இந்த கலவையில் ஊற்றவும் ரெண்டு முறை தட்டவும்.
  6. குக்கர் இல் உப்பு கொட்டி 10 நிமிடம் சிமில் வைக்கவும். கஸ்கெட் வெயிட் எடுத்து விடவும். 10 நிமிடம் கழித்து ஒரு பாத்திரம் வைத்து அதனுள் இந்த வெண்ணை தடவிய பாத்திரம் வைக்கவும். குக்கர் மூடி 40 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்