வீடு / சமையல் குறிப்பு / மல்டி கிரைன் இட்லி பர்கர்

Photo of Multi grain idly burger by Krishnasamy Vidya Valli at BetterButter
642
2
0.0(0)
0

மல்டி கிரைன் இட்லி பர்கர்

Nov-19-2017
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மல்டி கிரைன் இட்லி பர்கர் செய்முறை பற்றி

எப்போதும் பீட்ஸா பர்கர் னு கேட்கிற குழந்தைகளுக்கு வீட்டில் பலவிதமான தானியங்களை உபயோகித்து இட்லி செய்து அதைக்கொண்டு புது விதமான பர்கர் செய்து அவர்களை அசத்தலாம். காய்களும் தானியங்களும் சேர்ப்பதால் ஆரேக்கியமான உணவு இது . இட்லி மாவு செய்வதற்கான நேரம் சேர்க்கப்படவில்லை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஷாலோ ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி செய்வதற்கு தேவையானவை :
  2. கேழ்வரகு, கம்பு, தினை, குதிரைவாலி, சோளம், கொள்ளு போன்ற தானியங்கள் - தலா 1/2 தேக்கரண்டி
  3. புழுங்கல் அரிசி - 2 தேக்கரண்டி
  4. உருட்டு ஊளுந்து - 1 தேக்கரண்டி
  5. உப்பு - 1 தேக்கரண்டி
  6. எள் - 1/2தேக்கரண்டி
  7. வெஜிடபிள் பேட்டி செய்வதற்கு தேவையானவை
  8. உருளைக்கிழங்கு - 1
  9. காய்கள் பொடியாக நறுக்கியது - 1 / 4 கப் (பட்டாணி குடைமிளகாய் வெங்காயம் கேரட் பீன்ஸ் )
  10. மல்டி கிரன் கோதுமைமாவு-1/4 கப்
  11. கார்ன்பிளவர் -1 1 / 2 தேக்கரண்டி
  12. மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி, காஷ்மீர் சில்லிபவுடர், ஆம்சூர் பவுடர் மிளகு பொடி - தலா 1/4 தேக்கரண்டி
  13. உப்பு - 1 / 2 தேக்கரண்டி + 1 சிட்டிகை
  14. எண்ணெய் - 1 தேக்கரண்டி + ஷாலோ பிரை பண்ணுவதற்கு தேவையான அளவு
  15. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  16. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 4 தேக்கரண்டி
  17. பிரட் கிரம்ப்ஸ் 2 தேக்கரண்டி
  18. அலங்கரிக்க -கேரட் வட்டமாக நறுக்கியது - 6 தக்காளி - 3
  19. பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை - தலா 1 / 2 தேக்கரண்டி
  20. சில்லி சாஸ், டோமாட்டோ சாஸ், சோயாசாஸ் - தலா 1 / 4 தேக்கரண்டி
  21. வெண்ணெய் - 2 தேக்கரண்டி (டோஸ்ட் செய்வதற்கு )
  22. சீஸ் அல்லது வெண்ணெய் சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. தானியங்கள் அரசி, உளுந்து தனியாக ஊற வைத்து தனித்தனியே அரைத்து பிறகு சேர்த்து கலந்து 6 மணிநேரம் புளிக்க விடவும்
  2. கொஞ்சம் உயரமான கிண்ணத்தில் எண்ணெய் தடவி மாவு விட்டு எள் தூவி குக்கரில் வெய்ட் போடாமல் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்
  3. உருளைகிழங்கை வேக வைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
  5. பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. எல்லா காய்களையும் போட்டு ஒரு வதக்கு வதக்கிக்கலாம்
  7. ஒரு கிண்ணத்தில் வதக்கிய காய்கள் வேகவைத்த உருளைக்கிழங்கு மஞ்சள் பொடி, ஆம்சூர் பவுடர், கரம் மசாலா, காஷ்மீர் சில்லிபவுடர், மிளகு பொடி, மல்டி கிரைன் கோதுமைமாவு 3/4 தேக்கரண்டி, கான்பிளவர், கொத்தமல்லி இலை உப்புசேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்
  8. சிறு கட்லட் போன்று தட்டிக்கொள்ளவும்
  9. ஒரு கிண்ணத்தில் 3/4 தேக்கரண்டி கான்பிளவர் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தோசை மாவைவிட தண்ணியாக கரைத்துக்கொள்ளவும்
  10. செய்துவைத்துள்ள கட்லெட்டை இந்த கலவையில் பிரட்டி பின்னர் பிரட் க்ரம்ப்சில் ஒத்தி எடுத்துக்கொள்ளவும்
  11. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கட்லெட்டை ஷாலோ பிரை செய்து எடுக்கவும்
  12. வேகவைத்து ஆற வைத்த இட்லி யை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்
  13. பிரட்டை டோஸ்ட் செய்வது போல் வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்யவும்
  14. இனி அலங்கரிக்க வேண்டியது தான்.
  15. ஒரு பகுதி இட்லி மேல் வட்டமாக நறுக்கிய கேரட் சுற்றி வைத்து அதன் மீது தக்காளி வைத்து சில்லிசாஸ் டோமாட்டோ சாஸ் சோயாசாஸ் ஸ்பிரிங்கிள் செய்து பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை தூவி மேலே கட்லெட் வைத்து ஒரு பீஸ் சீஸ் அல்லது வெண்ணெய் வைக்கவும் .
  16. மேலே இன்னொரு பகுதி இட்லி வைத்து மூடி ஒரு தக்காளி வைத்தால் அருமையான இட்லி பர்கர் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்