வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் கேரட் ரைஸ்

Photo of Instant carrot rice by Krishnasamy Vidya Valli at BetterButter
445
4
0.0(0)
0

இன்ஸ்டன்ட் கேரட் ரைஸ்

Nov-22-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் கேரட் ரைஸ் செய்முறை பற்றி

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ரைஸ் இது. செய்வது மிகமிக சுலபம் சீக்கிரமே செயயய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சாதம் - 1 கப்
  2. கேரட் துருவல் - 4 தேக்கரண்டி
  3. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  4. பெருங்காயம் - 1 சிட்டிகை
  5. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  6. கறிப்பொடி -1 / 2 தேக்கரண்டி (மிளகாய் வத்தல் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வறுத்து பொடித்தது)
  7. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  8. தாளிக்க கடுகு - 1 / 4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி , வறுத்த வேர்கடலை பருப்பு - 1 / 4 தேக்கரண்டி கருவேப்பிலை - 1 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. கேரட் துருவிக்கொள்ளவும் மற்ற பொருட்களை ஒரு தட்டில் வைத்துக்கொள்ளலாம்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு வறுத்த வேர்கடலை கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளித்து கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்
  3. ரொம்ப வதங்க வேண்டியதில்லை. உப்பு தனியா பொடி கறிப்பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  4. சாதம் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும் . அப்பளத்துடன் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்