வீடு / சமையல் குறிப்பு / கிள்ளு வடகம்

Photo of Killu vadagam by Subashini Krish at BetterButter
1135
2
0.0(0)
0

கிள்ளு வடகம்

Nov-25-2017
Subashini Krish
4320 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிள்ளு வடகம் செய்முறை பற்றி

வீட்டில் ஏதாவது விருந்து நடக்கும் போது சாதம் சற்று அதிகமாகவே மீந்து விடுவது உண்டு. அதை வீணாக்காமல் கிள்ளு வடாமாக மாற்றி விடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பழைய சாதம் 10 கப்
  2. சீரகம் 2 ஸ்பூன்
  3. சிகப்பு மிளகாய் 10
  4. உப்பு
  5. வடகம் காய வைக்க ஒரு பருத்தி வேஷ்டி

வழிமுறைகள்

  1. சாதத்தில் முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
  2. சிகப்புமிளகாய் ,சீரகத்தை ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  3. சாதத்தை நீரிலிருந்து பிழிந்து மிக்ஸியில் போட்டு சற்றே கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
  4. சாதக்கலவையையும் மிளகாய் சீரக விழுதையும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
  5. நன்கு வெயில் படும் இடத்தில் வேஷ்டியை விரித்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக கிள்ளி வைக்கவும்.
  6. 3 நாட்கள் நன்கு காய வைத்து எடுத்து வைக்கவும்
  7. தேவைப்படும் போது எண்ணெயில் பொரித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்