வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு வெங்காயகோஸ்

Photo of Chettinad vengayakoss by Adaikkammai Annamalai at BetterButter
62
7
0.0(0)
0

செட்டிநாடு வெங்காயகோஸ்

Nov-27-2017
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு வெங்காயகோஸ் செய்முறை பற்றி

How to make chettinad vengayakoss

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • இந்திய
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. சமையல் எண்ணெய் : 5 தேக்கரண்டி
 2. கடுகு. : 1/2 தேக்கரண்டி
 3. பொடியாக நறுக்கிய வெங்காயம். : 2
 4. தக்காளி : 1
 5. உப்பு : தேவையான அளவு
 6. அரைத்து எடுக்கவேண்டிய பொருட்கள்
 7. சோம்பு : 1/2 தேக்கரண்டி
 8. பொட்டுகடலை. : 3 தேக்கரண்டி
 9. துருவிய தேங்காய் : ஒரு கை அளவு
 10. வரமிளகாய் 7 (அல்லது) மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. சோம்பு , பொட்டுகடலை, துருவிய தேங்காய் , வரமிளகாய் (அல்லது) மிளகாய் தூள் இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்
 2. அரைத்து எடுத்து அரை கப் தண்ணீர் விட்டு நன்றாக அதை கரைத்து கொள்ளவும் .
 3. ஒரு சட்டியில் 5 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து போட்டு தாளித்து பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய 2 வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
 4. வதக்கிய பின் 1 தக்ளிகாயை போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு போட்டு கரைத்து வைத்த மிளகாய் சாற்றை ஊற்றி ரொம்ப தண்ணீர் விடாமல் கெட்டியாக இல்லாமல் நடு நிலையாக கொதிக்க விடவும்....
 5. சிறிது நேரம் கழித்து உப்பு , காரம் பார்த்து வேண்டுமென்றல் போட்டு நன்றாக கொதித்த பின் இறக்கவும்.
 6. சுவையான செட்டிநாடு வெங்காய கோஸ் ரெடி....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்