வீடு / சமையல் குறிப்பு / Scotched paneer with tangy hot sauce

Photo of Scotched paneer with tangy hot sauce by Margaret Charles at BetterButter
585
4
0.0(1)
0

Scotched paneer with tangy hot sauce

Dec-07-2017
Margaret Charles
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Scotched paneer with tangy hot sauce செய்முறை பற்றி

ஸ்டார்டர் எனப்படும் வகை. தேநீர் பார்ட்டிகளுக்கு பொருத்தமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் - 100 கி
  2. உருளைக்கிழங்கு - 2
  3. வெங்காயம் -1
  4. பச்சை மிளகாய் -2
  5. சோம்பு பொடி - 1 தே க
  6. மிளகு பொடி - 1 தே க
  7. புளி - எலுமிச்சை அளவு
  8. மிளகாய் வத்தல் - 10
  9. பூண்டு - 3 பல்
  10. பிரட் தூள் - 1 கப்
  11. சோள மாவு - 1 மே க
  12. உப்பு - தேவைக்கேற்ப
  13. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு வேக வைத்து த உரித்து உப்பு மிளகு சேர்த்து மசித்து வைக்கவும்
  2. வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நசுக்கி வைக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் மிளகாய் கலவையை சேர்த்து வதக்கவும்
  4. பச்சை மனம் மாறிய உடன் துருவிய பன்னீர் சேர்க்கவும்
  5. பின்னர் சோம்பு பொடி சேர்த்து வதக்கவும்
  6. அடுப்பை அணைத்து வைக்கவும்.
  7. கலவை ஆரிய உடன் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு மசித்து சிறு உருண்டைகளாக நீட்ட வாக்கில் உருட்டவும்
  8. இதை மசித்த உருளைக்கிழங்கு கொண்டு பேக் செய்யவும்
  9. சோள மாவை சிறிது தண்ணீரில் கரைக்கவும்
  10. பேக் செய்து வைத்ததை சோள மாவில் உருட்டி, ரொட்டி தூளில் தோய்த்து மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்
  11. சாஸ் செய்ய
  12. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, மிளகாய் வத்தல் வதக்கவும்
  13. இதை முக்கால் பாகம் கர கரப்பாக பொடித்து எடுக்கவும்.
  14. புளி ஊற வைத்து புளி தண்ணீரை ஒரு பானில் ஊற்றி கொதிக்க விடவும்
  15. பொடித்து வைத்த கலவை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  16. பச்சை மனம் மாறிய உடன் தீயை அணைக்கவும். முதலில் சாஸ் செய்து வைத்து பின்னர் ஸ்கொட்ச்ட் பன்னீர் செய்யவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Jan-14-2018
Subhashni Venkatesh   Jan-14-2018

super recipe

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்