வீடு / சமையல் குறிப்பு / ஃப்யூஷன் தால் ஃப்ரை

Photo of Fusion Dal Fry by Sowmya Sundar at BetterButter
280
4
0.0(0)
0

ஃப்யூஷன் தால் ஃப்ரை

Dec-13-2017
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஃப்யூஷன் தால் ஃப்ரை செய்முறை பற்றி

பார்ட்டியின் ரிச்சான உணவுகளுக்கு இடையே பரிமாறலாம் இந்த ஆரேக்கியமான தால். பலவிதமான பருப்புகளை கொண்டு செய்யும் சுவையான தால் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாசிப்பருப்பு- 1/4 கப்
  2. கடலை பருப்பு- 1/4 கப்
  3. துவரம் பருப்பு- 1/4 கப்
  4. மசூர் பருப்பு- 1/4 கப்
  5. கருப்பு உளுந்து- 1/4 கப்
  6. வெங்காயம்- 2(நறுக்கியது)
  7. தக்காளி- 2(நறுக்கியது)
  8. நறுக்கிய சுரைக்காய்- 1/2 கப்
  9. பச்சை மிளகாய்-3(நறுக்கியது)
  10. இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
  11. சீரகம்- 1 டீஸ்பூன்
  12. மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
  13. மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
  14. மல்லி தூள்- 1 டீஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு
  16. எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  17. எலுமிச்சை சாறு- 2 டேபிள் ஸ்பூன்
  18. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. பருப்பு வகைகளை சேர்த்து கொள்ளவும்.
  2. பருப்பு வகைகளை களைந்து விட்டு ஒரு குக்கரில் தேவையான தண்ணீர் ஊற்றி நறுக்கிய சுரைக்காயுடன் 2 அல்லது 3 விசில் வரை விட்டு நன்கு வேக வைத்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. சிறிது வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள், பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின்னர் அதில் வேக வைத்த தாலை கொட்டி சுமார் 5 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
  6. மல்லி இலை மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்