வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் ஜாம்

Photo of Beetroot Jam by Banupriya Jawahar at BetterButter
772
2
0.0(0)
0

பீட்ரூட் ஜாம்

Dec-14-2017
Banupriya Jawahar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் ஜாம் செய்முறை பற்றி

எந்த விதமான கெமிக்கல்களும் ப்ரிஸர்வேட்டிவ்ஸும் சேர்க்காத ஜாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கெட்டியான, ஃப்ரெஷ்ஷான பீட்ரூட் 1/2 கிலோ
  2. ஜீனி 350 கிராம்
  3. பால்/தேங்காய் பால் 1/2 கப்
  4. ஏலக்காய்தூள் 1/4 தேக்கரண்டி
  5. நெய் 2 மேஜைக்கரண்டி
  6. முந்திரி 15

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கனத்த பாத்திரத்தில் அரைத்த பீட்ரூட் விழுது, பால் சேர்த்து வேக விடவும்.
  3. பீட்ரூட் வெந்ததும், ஜீனி சேர்க்கவும்.
  4. ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  5. 1 மேஜைக்கரண்டி நெய் விட்டு கிளறவும்.
  6. பீட்ரூட், ஜீனியுடன் கலந்து ஜாம் பதம் வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
  7. மீதமுள்ள 1 மேஜைக்கரண்டி நெய்யில் முந்திரி வறுத்து சேர்க்கவும்.
  8. சுவையான சத்தான பீட்ரூட் ஜாம் ரெடி
  9. பார்ட்டியின் போது ப்ரெட் மற்றும் சப்பாத்தியுடன் பரிமாறலாம். இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ள உகந்தது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்