முள்ளங்கி ரைத்தாவுடன் தென்னிந்திய பாணியிலான வெஜிடபிள் புலாவ் | South Indian Style vegetable Pulao with Radish Raita in Tamil

எழுதியவர் Nandita Shyam  |  25th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of South Indian Style vegetable Pulao with Radish Raita by Nandita Shyam at BetterButter
முள்ளங்கி ரைத்தாவுடன் தென்னிந்திய பாணியிலான வெஜிடபிள் புலாவ்Nandita Shyam
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

1112

0

முள்ளங்கி ரைத்தாவுடன் தென்னிந்திய பாணியிலான வெஜிடபிள் புலாவ் recipe

முள்ளங்கி ரைத்தாவுடன் தென்னிந்திய பாணியிலான வெஜிடபிள் புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make South Indian Style vegetable Pulao with Radish Raita in Tamil )

 • கொத்துமல்லி இலைகள் அலங்கரிப்பதற்காக
 • கெட்டித் தயிர் - 300 மிலி
 • உப்பு - சுவைக்கேற்ற அளவு
 • கஸ்தூரி வெந்தயம் - 1 தேக்கரண்டி
 • மிளகாய் துண்டுகள் - 1/2 தேக்கரண்டி
 • பெருங்காயம் - ஒரு சிட்டிகை
 • கடுகு - 1/2 தேக்கரண்டி
 • எண்ணெய் - 1 தேக்கரண்டி
 • முள்ளங்கி - 2 நடுத்தர அளவு, தோல் உரிக்கப்பட்டு துருவப்பட்டது
 • ரைத்தாவுக்கு
 • பச்சை மிளகாய் - 1
 • புதிய அல்லது பிரிஜ்ஜில் வைத்த தேங்காய் - 3 தேக்கரண்டி
 • புதினா இலைகள் - 3 தேக்கரண்டி
 • கசகசா - 1 தேக்கரண்டி, சிறிது வறுக்கப்பட்டது
 • வெங்காயம் - 1 சிறியது, பொடியாக நறுக்கப்பட்டது
 • அரைத்த சாந்துக்கா:
 • கொத்துமல்லி அலங்கரிப்பதற்காக
 • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
 • சுவைக்கேற்ற உப்பு
 • பச்சை மிளகாய் -1, பிளக்கப்பட்டது
 • இஞ்சிப்பூண்டு விழுது - 1 - 1/2 தேக்கரண்டி
 • வெங்காயம் 1 நடுத்தர அளவிலானது, நீளவாக்கில் நறுக்கப்பட்டது
 • கிராம்பு - 3
 • ஏலக்காய் - 3
 • இலவங்கப்பட்டை - 1 துண்டு
 • பிரிஞ்சி இலை - 1
 • சீரகம் - 1தேக்கரண்டி
 • எண்ணெய் அல்லது நெய் - 3 தேக்கரண்டி
 • கேரட், பிரஞ்சு பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிபிளவர் - 2 கப், நறுக்கப்பட்டு நீளவாக்கில் துண்டாக்கப்பட்ட காய்கறிக்கலவை.
 • பாஸ்மதி அரிசி - 250 கிராம்
 • புலாவுக்கு:

முள்ளங்கி ரைத்தாவுடன் தென்னிந்திய பாணியிலான வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி | How to make South Indian Style vegetable Pulao with Radish Raita in Tamil

 1. அரிசி சற்றே பொன்னிறமாகவும் வாசனை வரும்வரை எதுவும் சேர்க்காமல் வறுக்கவும். நன்றாகக் கழுவி, வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
 2. அரைத்து சாந்துக்குக் கீழ் பட்டியிலப்பட்ட அனைத்துப் பொருள்களையும் கொஞ்சம் தண்ணீரோடு அரைத்து எடுத்து வைக்கவும்.
 3. எண்ணெய் அல்லது நெய்யை கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் சூடுபடுத்தி சீரகம் சேர்க்கவும். பழுப்பானதும் பிரிஞ்சி இலை, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் சேர்த்து அவை வெடிக்கும்வரை வறுக்கவும்.
 4. அவை வெடிக்க ஆரம்பித்ததும், வெங்காயம் சேர்த்து பளபளப்பாகும்வரை வறுக்கவும். பிளந்த மிளகாய், இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.
 5. நறுக்கப்பட்டக் காய்கறிகள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து காய்கறிகள் பாதியளவு வெந்து மிருதுவாகும்வரை வறுக்கவும்.
 6. அரைத்தச் சாந்தைக் கலக்கி மேலும் இரண்டு நிமிடங்கள் அவற்றின் பச்சை வாடை போகும்வரை வறுக்கவும்.
 7. கழுவி வடிக்கட்டப்பட்ட அரிசியை மெதுவாகச் சேர்க்கவும். 3-1/2ல் இருந்து 4 கப் தண்ணீர், கரம் மசாலா சேர்த்து மிதமானச் சூட்டில் அரிசி முழுமையாக வேகும்வரை வேகவைக்கவும்.
 8. கொத்துமல்லியால் அலங்கரித்து ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.
 9. ரைத்தாவுக்கு
 10. எண்ணெயைக் கடாயில் சூடுபடுத்தி கடுகு சேர்க்கவும். அவை வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயம் சேர்த்து மேலும் சில நொடிகள் வறுக்கவும். மிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வறுக்கவும்.
 11. துருவப்பட்ட முள்ளங்கி, உப்பு ஆகியவற்றைக் கலக்கி தண்ணீர் முழுமையாக ஆவியாகி கலவை உலரும் வரை வறுக்கவும். கஸ்தூரி வெந்தயத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து, அடுப்பிலிருந்து எடுத்து முழுமையாக ஆறவிடவும்.
 12. ஆறிவிட்ட முள்ளங்கிக் கலவையில் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கொத்துமல்லியால் அலங்கரித்து உங்களுக்குப் பிடித்த ரைத்தாவும் எதனுடனாவது பரிமாறவும்.

Reviews for South Indian Style vegetable Pulao with Radish Raita in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.