Photo of CHINESE SAYUR mix oyster salad by Adaikkammai Annamalai at BetterButter
598
6
0.0(1)
0

CHINESE SAYUR mix oyster salad

Dec-18-2017
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

CHINESE SAYUR mix oyster salad செய்முறை பற்றி

மிக ஆரோக்கியமானது... காய்கறிகள் எப்போதுமே உடலுக்கு நல்லது... இது பிரேட் ரோஸ்ட் மற்றும் நூடுல்ஸ் வகைகளுக்கு அல்லது சும்மா சாப்பிட சுவையாக ஒருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரெஞ்ச்
  • ஸ்டீமிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் - 2 வட்டமாக நறுக்க வேண்டும்
  2. லாங் பீன்ஸ் - 4
  3. காலிபிளவர் - 10 குட்டி பூக்கள்
  4. ப்ரோக்கோழி - கொஞ்சம்
  5. குடை மிளகாய் - 1
  6. சாலட் கீரை - தேவையான அளவு
  7. பீ சூட் கீரை - தேவையான அளவு
  8. வெங்காயம் _ 1 தனியாக அரைத்து எடுது கொள்ளவும்
  9. பூண்டு - 4 ., இஞ்சி - சிறிது., அரைத்து எடுத்து கொள்ளவும் சேர்த்து
  10. ஓய்ஸ்டர் சால்ட் - 4 ஸ்பூன் ( இதில் இரண்டு வகை உள்ளது ஒன்று #வெஜ்_சாஸ் ( மஷ்ரூம் இருந்து தயார் செய்ய பட்டது) இரண்டாவது #நான்_வெஜ் .. நான் வெஜ் உபயோக படுத்தியுள்ளேன்
  11. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான அனைத்து காய்கறிகளையும் கட் செய்து எடுத்து கொள்ளவும் ..
  2. முதலில் பூண்டு மட்டும் இஞ்சியை அரைத்து எடுத்து கொள்ளவும்
  3. வெங்காயம் அரைத்து எடுத்து கொள்ளவும்.
  4. அதன் பின் பெரிய பாத்திரத்தில் அனைத்தையும் தண்ணியில் கொதிக்க விட்டு அதில் மஞ்சள் தூள் போட்டு சூடு வரும் வரை இருக்கவும்.. சூடு வந்தவுடன் ஒவ்வொரு காய்கறியாக எடுத்து போடவும்
  5. அரை வேக்காடக வந்த பின் அதை ஒரு அறிகரண்டியில் அரித்து காயை எடுத்து வைக்கவும்
  6. இதே போல் அனைத்து காய்கறிகளையும் போட்டு எடுக்கவும்
  7. கடைசியாக கீரையை போட்டு எடுத்து தனியாக எடுத்து கொள்ளவும்
  8. ஏனென்றால் வதக்கும்பொழுது ஒன்றாக கீரையை சேர்த்தல் அதிகமாக வெந்துவிடும்... எனவே கடைசியாக கீரை சேர்ப்பது நல்லது .. அந்த பீ ஷூட் கீரையை சூடு தண்ணீரில் போட வேண்டாம் .. அப்படியே சேர்க்கலாம்
  9. இப்போழுது அரை வெக்கடாக காய் தயார் ,,,
  10. முதலில் எண்ணையை காய வைத்து அரைத்த வெங்காயத்தை அதில் சேர்த்து வதக்கவும் பச்சை வாடை போகும் வரையில் வதக்கவும்
  11. வதங்கியவுடன் அரைத்த இஞ்சியை சேர்த்து வதக்கவும்
  12. நன்றாக வதங்கிய பின் காரம் இல்லாத அப்படியே சாப்பிட கூடிய சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்
  13. பின் இவை அனைத்தும் நன்றாக வதங்கிய வுடன் காய்கறிகளை சேர்த்து வதக்கவும் கீரை தவிர அனைத்தையும் சேர்த்து
  14. பின் ஒரு வதக்கு வதக்கி நன்றாக வதங்கிய வுடன் ஓய்ஸ்டர் சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்
  15. பின் கீரையை கடைசியாக போட்டு கிளறவும்
  16. 1/2 டம்லர் தண்ணீர் சேர்க்கவும் ,சூப் தயார் செய்வதற்காக தண்ணீர் சேர்க்கவும் ,,, ஒரு கொதி கொதித்த வுடன் இறக்கவும்
  17. சுவையான சயூர் மிக்ஸ் சாலட் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Yasmin Shabira
Dec-18-2017
Yasmin Shabira   Dec-18-2017

Semma

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்