Photo of Gobi mutter masala by Yasmin Shabira at BetterButter
296
10
0.0(7)
0

Gobi mutter masala

Dec-20-2017
Yasmin Shabira
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காளிஃப்ளவர் ; 1 கப்
  2. பட்டாணி : 1/2 கப்
  3. வெங்காயம் : 2
  4. தக்காளி : 2
  5. பச்சை மிளகாய் : 1
  6. காய்ந்த மிளகாய் : 4
  7. மல்லி தழை : ஒரு கைப்பிடி
  8. ஜீரக தூள் : 1 தேக்கரண்டி
  9. கரம் மசாலா : 1 தேக்கரண்டி
  10. இஞ்சி பூண்டு விழுது : 1 மேசைக்கரண்டி
  11. எண்ணெய் : 2 மேசைக்கரண்டி
  12. தக்காளி சாஸ் : 1 மேசைக்கரண்டி
  13. உப்பு : தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 2 கப் தண்ணீரில் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அதில் காளிஃப்ளவரை 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்...
  2. நன்றாக கொதித்த பின் தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்...
  3. பச்சை பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்..
  4. தக்காளி மற்றும் காய்ந்த மிளகாயை நன்றாக வேகவைத்து தக்காளியின் தோலை உரித்துகொள்ளவும் நன்றாக ஆறியபின் தக்காளி மற்றும் காய்ந்த மிளகாயை மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்...
  5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்...
  6. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்...
  7. நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதங்கிய பின்னர் அரைத்து தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்...
  8. நன்றாக வதங்கி வற்றி திரண்டு வந்த பின் ஜீரகதூள் கரம் மசாலா மற்றும் சிறிது உப்பு சேர்க்கவும்...
  9. நன்றாக கிளறி காளிஃப்ளவர் மற்றும் வேகவைத்த பட்டாணி சேர்த்து பிரட்டவும்...1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றவும்...
  10. சிம்மில் வைத்து 6-7 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்...
  11. நன்றாக கொதித்து ஒன்று சேர்ந்தபின் ஒரு கைப்பிடி மல்லி தழை தூவி பிரட்டி இறக்கவும்...
  12. ஈசியான சூப்பரான கோபி மட்டர் மசாலா ரெடி!!!
  13. சப்பாத்தியுடன் சாப்பிட மிக அருமையான சைட் டிஷ்...

மதிப்பீடு (7)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-22-2017
Pushpa Taroor   Dec-22-2017

Good

Nasrin Fowsiya
Dec-21-2017
Nasrin Fowsiya   Dec-21-2017

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்