வீடு / சமையல் குறிப்பு / கேரளா பெப்பர் சிக்கன்

Photo of Kerala pepper chicken by Rabia Hamnah at BetterButter
264
4
0.0(0)
0

கேரளா பெப்பர் சிக்கன்

Dec-21-2017
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேரளா பெப்பர் சிக்கன் செய்முறை பற்றி

சுவையான பெப்பர் சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன்-1/2 கி
  2. பெரிய வெங்காயம்-3-4
  3. தக்காளி-3
  4. ப.மிளகாய்-2
  5. மிளகு தூள்- 2ஸ்பூன்
  6. சீரக தூள்-3-4 ஸ்பூன்
  7. மிளகாய் தூள்-1 ஸ்பூன்
  8. மல்லி தூள்- 2ஸ்பூன்
  9. தயிர்-1 டேபிள் ஸ்பூன்
  10. தக்காளி சாஸ்-2 ஸ்பூன்
  11. எலுமிச்சை சாறு- 2ஸ்பூன
  12. முழு மிளகு-2ஸ்பூன்
  13. தேங்காய் எண்ணெய் - தேவைக்கு
  14. உப்பு- தேவைக்கு
  15. பட்டை, கிராம்பு, ஏலம்-2
  16. மல்லி இலை தேவைக்கு

வழிமுறைகள்

  1. சிக்கனை சுத்தம் செய்து உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் முழு மிளகை லேசாக வறுத்து கொர கொரப்பாக மிக்ஸியில் திரிச்சி வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும். தயிர் உப்பு சேர்க்கவும். மிளகாய் சேர்க்கவும்.
  4. பின்பு ஊற வைத்த சிக்கன் சேர்க்கவும்.மிளகு தூள், சீரக தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சிம்மில் வைத்து 30 நிமிடம் வேக விடவும்.
  5. எண்ணெய் விட்டு வந்ததும் பின்பு சாஸ் வகைகளை சேர்க்கவும். பின் வறுத்த மிளகு பொடி சேர்த்து கிளறி விடவும்.
  6. பின் எலுமிச்சை சாறு, மல்லி இலை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்