கிராமத்து மீன் குழம்பு | Village style fish curry in Tamil

எழுதியவர் Asiya Omar  |  23rd Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Village style fish curry by Asiya Omar at BetterButter
கிராமத்து மீன் குழம்புAsiya Omar
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

5

0

3 votes
கிராமத்து மீன் குழம்பு recipe

கிராமத்து மீன் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Village style fish curry in Tamil )

  • ஆற்று அல்லது குளத்து மீன் - அரைக்கிலோ
  • உப்பு,மஞ்சள் தூள் - தேவைக்கு.
  • மீனை சுத்தம் செய்து மஞ்சள் உப்பு பிரட்டி வைக்கவும்.
  • வறுத்து அரைக்க:-
  • எண்ணெய் -2 தேக்கரண்டி
  • முழு மல்லி -1 மேஜைக்கரண்டி
  • சீரகம் -அரை -1 தேக்கரண்டி
  • மிளகு -அரை தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் -5
  • வெந்தயம் - கால் தேக்கரண்டி
  • கடலை பருப்பு -1 தேக்கரண்டி
  • அரிசி -1 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் -100 கிராம்
  • நாட்டுப் பூண்டு பல் -10
  • கடலை பருப்பு,அரிசி சேர்ப்பதால் தேங்காய் தேவையில்லை.
  • குழம்பு தாளிக்க:-
  • நல்ல எண்ணெய் -3 -4 மேஜைக்கரண்டி
  • கடுகு,வெந்தயம்-தலா 1/2 தேக்கரண்டி
  • கீறிய பச்சை மிளகாய் -2
  • கருவேப்பிலை,மல்லி இலை
  • புளிக்கரைசல் - ஒரு எலுமிச்சை அளவு புளியில்
  • புளிக் கரைசலில் கரைத்துக் கொள்ள 100 கிராம்
  • பழுத்த தக்காளி.

கிராமத்து மீன் குழம்பு செய்வது எப்படி | How to make Village style fish curry in Tamil

  1. வாணலில் எண்ணெய் விட்டு மேற்சொன்ன மசாலா ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்து வைக்கவும்.
  2. அத்துடன் நறுக்கிய வெங்காயம் பூண்டும் போட்டு வதக்கவும்.
  3. ஆற வைத்து அரைத்து எடுக்கவும்.
  4. புளியுடன் கலந்து தக்காளியை பிணைந்து கரைத்து வைக்கவும்.
  5. ஒரு மண்சட்டியில் எண்ணெய் சூடு செய்து வெந்தயம் கடுகு தாளிக்கவும்.
  6. கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  7. அத்துடன் அரைத்த விழுது போட்டு வதக்கவும்.
  8. புளி,தக்காளி பிணைந்த நீர் சேர்க்கவும்.
  9. நன்கு கொதிக்க வேண்டும்.
  10. சுத்தம் செய்து வைத்த மீனை அலசி சேர்க்கவும்.
  11. வேக விடவும்.
  12. எண்ணெய் தெளிந்து வரும் பொழுது நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும் .கெட்டிதன்மை உங்கள் விருப்பம்.
  13. சுவையான கிராமத்து மீன் குழம்பு தயார்.இரு நாட்கள் வைத்து சாப்பிட்டாலும் கெடாது. இட்லி,தோசை,சாதத்துடன் பரிமாறலாம்.

எனது டிப்:

வறுத்து அரைத்து ப்ரெஷாக செய்வது சுவையைத் தரும்.

Reviews for Village style fish curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.