வீடு / சமையல் குறிப்பு / மீன் முருங்கைக்காய் ஆணம்

Photo of Fish drumstick curry by Asiya Omar at BetterButter
475
6
0.0(0)
0

மீன் முருங்கைக்காய் ஆணம்

Dec-27-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மீன் முருங்கைக்காய் ஆணம் செய்முறை பற்றி

மீனோடு முருங்கைக்காய் சேர்த்து சமைத்தால் அதன் ருசி மணம் சொல்ல வார்தையில்லை.படிப் படியான படங்களுடன் இதோ

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பிடித்தமான மீன் துண்டுகள் - அரைக்கிலோ
  2. துண்டு போட்ட முருங்கைக்காய் -2
  3. எண்ணெய - 4 மேஜைக்கரண்டி
  4. கடுகு,உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  5. வெந்தயம் - அரை தேக்கரண்டி
  6. கருவேப்பிலை - 2 இணுக்கு
  7. சின்ன வெங்காயம் -100 கிராம்
  8. தக்காளி - 100 கிராம்
  9. நறுக்கிய பூண்டு பற்கள் -6
  10. பச்சை மிளகாய் - 3
  11. நறுக்கிய மல்லி இலை - சிறிது
  12. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  13. வீட்டு மசாலா -2 மேஜைக்கரண்டி
  14. புளி - எலுமிச்சை அளவு
  15. விரும்பினால் தேங்காய் அரைத்தது - கால் கப்
  16. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. மீனைச் சுத்தம் செய்து கழுவி மஞ்சள் தூள் போட்டு நன்கு அலசி வைக்கவும்.
  2. புளித்தண்ணீரோடு மசாலா தூள் கலந்து வைக்கவும்.
  3. முருங்கைக்காயோடு சிறிது மசாலா உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம் தாளிக்கவும்.கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
  5. நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்துவதக்கவும்.தக்காளி,உப்பு ,மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு மசிய விடவும்.
  6. மசாலா கலந்த புளித்தண்ணீர் சேர்க்கவும்.
  7. நன்கு கொதிக்க விடவும்.புளி ,மசாலா வாடை மடங்க வேண்டும்.
  8. மீனைச் சேர்க்கவும்.
  9. மீன் கொதிக்கும் பொழுது வேக வைத்த முருங்கைக்காய் சேர்க்கவும்.அகப்பை போடக்கூடாது.
  10. எல்லாம் ஒன்று சேர்ந்து கொதிக்கட்டும்.
  11. அடுப்பை சிம்மில் வைக்கவும். தேங்காய் விருப்பம் இல்லையெனில் இப்படியே குழம்பை உபயோகிக்கலாம்.
  12. தேங்காய் சேர்த்தாலும் மிக அருமையாக இருக்கும்.கொதி வந்தவுடன் நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  13. சுவையான மீன் முருங்கைக்காய் ஆணம் தயார்.
  14. சூடான சோறு,பொரித்த மீன்,பொரியல்,ரசம்,அப்பளம் வைத்துப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்