வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் மசாலா

Photo of Beans Masala by Asiya Omar at BetterButter
343
4
0.0(0)
0

பீன்ஸ் மசாலா

Jan-01-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் மசாலா செய்முறை பற்றி

பொதுவாக பீன்ஸில் பொரியல் செய்வோம்,மசாலா செய்து பார்த்தேன்.அருமை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீன்ஸ் - கால் கிலோ
  2. எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  3. நறுக்கிய மல்லி இலை - சிறிது
  4. கருவேப்பிலை -2 இணுக்கு
  5. உப்பு - தேவைக்கு.
  6. அரைக்க:-
  7. எள்ளு -1-2 தேக்கரண்டி
  8. நறுக்கிய வெங்காயம்-1
  9. நறுக்கிய தக்காளி-1( வதக்கும் பொழுதும் சேர்க்கலாம்)
  10. மிளகாய்த்த்தூள் -1/2-1 தேக்கரண்டி
  11. மல்லித்தூள் -1 தேக்கரண்டி
  12. சீரகத்தூள் -1 தேக்கரண்டி
  13. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரைக்க தேவையான பொருட்கள் சேர்த்து அரைத்து வைக்கவும்.நறுக்க வேண்டியவைகளை தயார் செய்து வைக்கவும்.
  2. பீன்ஸ் உடன் அரைகப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் சூடாக்கி கருவேப்பிலை சேர்க்கவும்.அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.பச்சை வாடை போக 5 நிமிடம் வதக்கவும்.
  4. வேக வைத்த பீன்ஸ் தண்ணீருடன் சேர்க்கவும்.நன்கு ஒன்று சேர்ந்து கொதிக்கட்டும்.உப்பு சரி பார்க்கவும்.
  5. நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டவும். சுவையான பீன்ஸ் மசாலா தயார்.
  6. சாதம் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்