வீடு / சமையல் குறிப்பு / மீல் மேக்கர் பட்டாணி குருமா

Photo of Soya chunks and green peas gravy by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
530
4
0.0(0)
0

மீல் மேக்கர் பட்டாணி குருமா

Jan-01-2018
Muthulakshmi Madhavakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீல் மேக்கர் பட்டாணி குருமா செய்முறை பற்றி

மீல் மேக்கர் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து சுவையான குருமா. இந்த குருமா சப்பாத்தி, பரோட்டா மற்றும் தேங்காய் பால் புலவ் போன்ற உணவு வகைகளுக்கு அற்புதமான சைடு டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் மீல் மேக்கர்
  2. 1/4 கப் பச்சைபட்டானி
  3. 1 வெங்காயம் 
  4. 2 பச்சைமிளகாய் 
  5. 2 பட்டை
  6. 2 கிராம்பு
  7. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டுவிழுது
  8. ஒரு கை கறிவேப்பிலை
  9. சிறிதளவு கொத்தமல்லிஇலை
  10. 1/4 டீஸ்பூன் மிளகாய்தூள்
  11. 1/2 டீஸ்பூன் கரம்மசாலாதூள்
  12. 1/2 டீஸ்பூன் தனியாதூள்
  13. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  14. 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  15. உப்பு
  16. விழுது 1
  17. 1 வெங்காயம்
  18. 2 தக்காளி
  19. 1/4 டீஸ்பூன சோம்பு
  20. 1 அன்னாசி பூ
  21.  3 கல்பாசி 
  22. விழுது 2
  23. 1/4 கப் தேங்காய்துருவல்
  24. 6 முந்திரி பருப்பு

வழிமுறைகள்

  1. ஒரு அகலமான பாத்திரத்தில் மீல்மேக்கர் சிறது உப்பையும் கலந்து வைத்துக்கொள்ளவும். பின் அதில் கொதிக்கும் தண்ணீரை முழ்கும் வரை ஊற்றி மூடிப்போட்டு 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. பின் குளிர்ந்தநீரில் 3 முறைகழுவிக்கொள்ளவும்.பின் நன்றாக பிழிந்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை வதக்கவும். அவை லேசாக நிறம் மாறியதும் சோம்பு, கல்பாசி, அன்னாசிபூ போட்டு வதக்கவும்.அவை வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். 
  4. நன்கு ஆறிய பின் தண்ணீர் விடாமல் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  5. தேங்காய் துருவல், முந்திரியையும் சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
  6. கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.பின் கறிவேப்பிலை, பச்சைமிளகாய்,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. பின்  அதோடு அரைத்த வெங்காயம், தக்காளி விழுது போட்டு லேசாக வதக்கவும். அதோடு பிழிந்த மீல்மேக்கர், பச்சைபட்டாணி சேர்த்து வதக்கி 1 1/2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் மூடிப்போட்டு குறைந்த தணலில் வேகவைக்கவும்.
  8. பின் மிளகாய்தூள், தனியா தூள், மஞ்சள்தூள் தேவையான உப்பு போட்டு மேலும் 10 நிமிடங்கள் மூடிப்போட்டு வேகவைக்கவும்.
  9. அவை  வெந்த பின் தேங்காய் முந்திரி விழுது, கரம்மசாலாதூள் சிறிது தண்ணீர் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்கவைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்