வீடு / சமையல் குறிப்பு / கூட்டு  குழம்பு

Photo of Koottu Kuzhambu by Surya Rajan at BetterButter
1664
2
0.0(0)
0

கூட்டு  குழம்பு

Jan-02-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கூட்டு  குழம்பு செய்முறை பற்றி

கூட்டு  குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கத்தரிக்காய்  : 1
  2. வாழைக்காய் : 1
  3. உருளைக்கிழங்கு : 1
  4. முருங்கைக்காய் : 1
  5. சின்ன வெங்காயம் : 10
  6. பூண்டு : 10 பல்
  7. தக்காளி : 1
  8. மிளகாய் : 2
  9. நல்லெண்ணெய் : 5 மேஜைக்கரண்டி
  10. உப்பு : தேவையான அளவு
  11. மஞ்சள் தூள் : ½  மேஜைக்கரண்டி
  12. குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :1 மேஜைக்கரண்டி )
  13. சீரக தூள் : ½ மேஜைக்கரண்டி
  14. புளி : நெல்லி அளவு
  15. தாளிக்க :
  16. கடுகு : 1 மேஜைக்கரண்டி
  17. கருவேப்பிலை : சிறிதளவு
  18. சின்ன வெங்காயம் : 2
  19. வெந்தயம் : ¼ மேஜைக்கரண்டி
  20. அரைக்க : (தேங்காய் விழுது )
  21. தேங்காய் : 1 கையளவு
  22. சின்ன வெங்காயம் : 5

வழிமுறைகள்

  1. கத்தரிக்காய் , வாழைக்காய் , மிளகாய், தக்காளி , உருளை கிழங்கு , முருங்கைக்காய் ஆகியவற்றை  நீளவாக்கில் வெட்டி வைத்து கொள்ளவும்  
  2. ஒரு  பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, பூண்டு, வெங்காயம், சேர்த்து  1 நிமிடம் வதக்கவும் . பின் தக்காளி சேர்த்து வதக்கவும் .
  3. பின் நறுக்கிய முருங்கைக்காய் , வாழைக்காய் , மிளகாய் , உருளைக்கிழங்கு , கத்தரிக்காய் சேர்த்து 3 - 5 நிமிடம் குறைந்த தீயில் வதக்கவும்
  4. பின் மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , சீரக தூள் , சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
  5. பின் புளி தண்ணீர் ,உப்பு தேவையான தண்ணீர் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
  6. குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பினை கொதிக்க விடவும் .
  7. மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு கடுகு, வெந்தயம் , சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் .
  8. மேற்சொன்ன தாளிப்பினை குழம்பில் சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பினை ஆப் செய்யவும்  .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்