வீடு / சமையல் குறிப்பு / வடை மோர்க்குழம்பு

Photo of Vadai mor kuzhambu / Vada buttermilk gravy by Asiya Omar at BetterButter
544
10
0.0(0)
0

வடை மோர்க்குழம்பு

Jan-08-2018
Asiya Omar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வடை மோர்க்குழம்பு செய்முறை பற்றி

பொங்கல் சமயம் அல்லது விசேஷ நாட்களில் வடை நிச்சயம் இருக்கும். வடைக்கு அரைக்கும் மாவில் சிறிது எடுத்து சுட்டு இந்த மோர்க்குழம்பு செய்து அசத்தலாம்.நெல்லை சைவாள் செய்யும் குழம்பு இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ஊற வைக்க உளுந்து -100 கிராம்
  2. அரைக்க:-
  3. அரிசி& துவரம் பருப்பு - தலா 1-2 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் 3-4
  5. சீரகம் - 1 தேக்கரண்டி
  6. தயிரில் கலந்து வைக்க:-
  7. தயிர் - 500 மில்லி
  8. மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  9. உப்பு - சுவைக்கு.
  10. தாளிக்க :-
  11. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  12. கடுகு,உ.பருப்பு -1 தேக்கரண்டி
  13. கிள்ளிய வற்றல்-2
  14. கருவேப்பிலை -2 இணுக்கு
  15. பெருங்காயம் -2 பின்ச்.

வழிமுறைகள்

  1. முதலில் ஊறிய உளுந்துடன் உப்பு ,இஞ்சி சிறிய துண்டு சிறிது சேர்த்து அரைத்து வடைக்கு எடுப்பது போல் எடுக்கவும்.
  2. எண்ணெய் காய விட்டு சிறிய சிறிய உருண்டையாக மாவை எடுத்துப் போட்டு சுட்டு எடுத்து வைக்கவும்.சிறிய வடை மாதிரியும் சுடலாம்.
  3. தயிரில் உப்பு,மஞ்சள் தூள் கலந்து நன்கு அடித்து வைக்கவும்.
  4. ஊற வைத்த அரிசி பருப்புடன் சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும்.சிறிது நீரில் கரைத்து வைக்கவும்.
  5. தாளிக்க ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விடவும்,கடுகு உ.பருப்பு மிளகாய் வற்றல் கருவேப்பிலை,பெருங்காயம் தாளிக்கவும்.
  6. அத்துடன் அரைத்த கலவையைச் சேர்த்து சிம்மில் வைத்து அடி பிடிக்காமல் கொதிக்க விடவும்.
  7. கலந்து வைத்த தயிர் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
  8. சுட்டெடுத்த வடைகளைச் சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.
  9. சுவையான வடை மோர்க்குழம்பு தயார்.
  10. வாழையிலைச் சாப்பாட்டில் இப்படி வித்தியாசமாய் ஒரு மோர்குழம்பு பரிமாறிப் பாருங்க. அசந்து விடுவார்கள்.தோழி உமாசங்கரின் ரெசிப்பி.நன்றி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்