Photo of Chettinaad ennaikizhi by Adaikkammai Annamalai at BetterButter
417
9
0.0(1)
0

Chettinaad ennaikizhi

Jan-12-2018
Adaikkammai Annamalai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. புழுங்கரிசி (இட்லி அரிசி) - 1 கப்
  2. ஊறவைத்த பாசிப்பருப்பு- 1 கப்
  3. வெல்லம் - 1 கப்
  4. எண்ணெய் - 200 மி.லி

வழிமுறைகள்

  1. முதலில் புழுங்கரிசி யை 1/ 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊற வைத்ததை அலசி எடுத்து கெட்டியாக மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்.
  3. நன்றாக நைசாக அரைத்த பின் அதில் 1 கப் இடித்து வைத்த வெல்லத்தை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும் இட்லி மாவு பதத்திற்கு.
  4. எண்ணெயை நன்றாக கூடுதலாக இருக்க வேண்டும் அப்போதுதான் நன்றாக தூளாக வரும் . இது செய்வதற்கு பாத்திரம் , ஓட்டாத இருப்பு சட்டி அல்லது நான் ஸ்டிக் பேனில் செய்வது நல்லது.
  5. எண்ணையை நன்றாக சேர்த்து காய வைத்து அரைத்து எடுத்து வைத்த மாவை அதில் சேர்த்து அதனுடன் ஊற வைத்த பாசிப்பருப்பை போட்டு நன்றாக கிண்டவும்
  6. கையை எடுக்காமல் கிண்டி கொண்டே இருக்க வேண்டும் பிடிக்க விடாமல் .. கொஞ்சம் கொஞ்சமாக கலர் மாறும்..,
  7. ஒட்டாமல் பிரட்டி கிண்டி கொண்டே இருக்கவேண்டும்
  8. நல்ல தூளாக வரும் வரை கிண்டவும். கலர் வெள்ளையிலிருந்து சர்க்கரை பொங்கல் நிறத்திற்கு வந்து விடும்
  9. அப்படி வர கண்டிப்பாக 1 மணி நேரம் மேல் ஆகும். அப்படி வந்தவுடனே அடுப்பை ஆஃப் செய்து அடுப்பிலே சற்று வைக்கவும்
  10. அப்போதுதான் உதிரியாக வரும்
  11. வந்தவுடனே இறக்கி பரிமாறவும். சுவையான ஒன்று. லட்டு போல் உருட்டியும் பரிமாறலாம். வயது வந்த பெண்களுக்கு நல்லது சத்து.
  12. சுவையான எண்ணெய் கிழி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raihanathus Sahdhiyya
Jan-13-2018
Raihanathus Sahdhiyya   Jan-13-2018

Thanks for the recipe sis.. Will surely try

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்