தவல வடை | Thavla vadai in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  16th Jan 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Thavla vadai by Krishnasamy Vidya Valli at BetterButter
தவல வடைKrishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    40

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

3

0

2 votes
தவல வடை recipe

தவல வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Thavla vadai in Tamil )

  • பச்சரிசி - 1 மேஜைகரண்டி
  • புழுங்கல் அரிசி - 1 மேஜைகரண்டி
  • கடலைப்பருப்பு - 1 மேஜைகரண்டி
  • துவரம்பருப்பு - 1 மேஜைகரண்டி
  • பாசிப்பருப்பு - 1 மேஜைகரண்டி
  • உருட்டு உளுந்து - 1 மேஜைகரண்டி
  • பச்ச மிளகாய் - 1
  • மிளகாய் வத்தல் - 2
  • வெங்காயம் - பொடியாக நறுக்கியது - 1 மேஜைகரண்டி
  • தேங்காய் துருவல் - 1 மேஜைகரண்டி
  • கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 2 சிட்டிகை
  • இஞ்சி - 1 சிறிய துண்டு
  • உப்பு - 1 தேக்கரண்டி
  • வடை பொரிப்பதற்குதேவையானஅளவுஎண்ணெய்
  • தாளிக்ககடுகு-1/2தேக்கரண்டி
  • கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  • எண்ணெய்-1/2தேக்கரண்டி

தவல வடை செய்வது எப்படி | How to make Thavla vadai in Tamil

  1. அரிசி பருப்பை தண்ணீர் விட்டு அரைமணி நேரம் முதல் நாற்பது நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்
  2. மிக்ஸியில் தண்ணீரை வடித்து விட்டுஉப்பு பெருங்காயம் பச்ச மிளகாய் மிளகாய் வத்தல் இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  3. மாவை கரண்டியால் எடுத்து விடும் பதத்திற்கு வைக்கவும்
  4. தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து சேர்க்கவும். வெங்காயம் கொத்தமல்லி இலை தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கரண்டியால் மாவை எண்ணெய்யில் விடவும்
  6. பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  7. தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்

எனது டிப்:

விருப்பப்பட்டால் கேரட் முட்டைகோஸ் துருவல் சேர்க்கவும்

Reviews for Thavla vadai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.