வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சப்பாத்தி

Photo of Potato chappathi by Krishnasamy Vidya Valli at BetterButter
520
5
0.0(0)
0

உருளைக்கிழங்கு சப்பாத்தி

Jan-17-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சப்பாத்தி செய்முறை பற்றி

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது உருளைக்கிழங்கு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும் ஒருவருக்கு மூன்று வீதம் நான்கு பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 4
  2. கோதுமை மாவு - 1 1/2 கப்
  3. உப்பு - 11/ 2 தேக்கரண்டி
  4. காரப்பொடி - 1 தேக்கரண்டி
  5. பெருங்காயம் - 4 சிட்டிகை
  6. கரம் மசாலா - 4 சிட்டிகை
  7. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  8. எண்ணெய் - 2 தேக்கரண்டி + சப்பாத்தி வாட்டி எடுப்பதற்கு தேவையான அளவு நெய் / எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. மற்ற பொருட்களையும் சேர்த்து (நெய்/எண்ணெய் தவிர) ஒரு பேசினில் எடுத்துக்கொள்ளவும்
  3. இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு தண்ணீர் சிறிது தெளித்து நன்றாக பிசைந்து வைக்கவும்
  4. பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் இட்டு கொள்ளவும் . மாவு பிசைந்தவுடன் இட்டு கல்லில் போட்டு வாட்டி எடுக்கவும். நேரம் ஆனால் இடமுடியாமல் போகலாம். அப்போழுது சிறிது டிரை மாவு சேர்த்து கொள்ளலாம்
  5. தோசைகல்லில் நெய் / எண்ணெய் விட்டு வாட்டி எடுக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும்
  6. சாலட் உடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்