இந்தூரி அவுல் மற்றும் ஜிலேபி | Indori Poha and Jalebi in Tamil

எழுதியவர் Pavani Nandula  |  25th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Indori Poha and Jalebi by Pavani Nandula at BetterButter
இந்தூரி அவுல் மற்றும் ஜிலேபிPavani Nandula
  • ஆயத்த நேரம்

    12

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    45

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1404

0

இந்தூரி அவுல் மற்றும் ஜிலேபி recipe

இந்தூரி அவுல் மற்றும் ஜிலேபி தேவையான பொருட்கள் ( Ingredients to make Indori Poha and Jalebi in Tamil )

  • எலுமிச்சை துண்டு - அலங்கரிக்க
  • வெட்டிய வெங்காயம் - அலங்கரிக்க
  • துருவிய தேங்காய்- அலங்கரிக்க
  • மாதுளைவிதை- அலங்கரிக்க
  • நம்கீன்/சேவ் - அலங்கரிக்க
  • கொத்தமல்லி இலை- 2 தேக்கரண்டி, வெட்டியது
  • சுவைக்கேற்ப உப்பு
  • சிகப்பு மிளகாய்த்தூள்-1/2 டீக்கரண்டி
  • மஞ்சள்தூள்-1/2 டீக்கரண்டி
  • கருவேப்பிலை - 8 முதல் 10
  • பச்சைமிளகாய் - 2
  • பெருஞ்சீரகம்- 1 டீக்கரண்டி
  • கடுகு- 1 டீக்கரண்டி
  • உருளைக்கிழங்கு- 1 நடுத்தரமானது, வெட்டியது
  • வெங்காயம்- 1 நடுத்தரமானது, வெட்டியது
  • அவுல் செய்வதற்கு: கனமான அவுல்- 2 கப்
  • தண்ணீர்- 1/2 கப்
  • சர்க்கரை-1 1/2 கப்
  • எலுமிச்சை சாறு -1 டீக்கரண்டி
  • சூடான எண்ணெய்- 2 தேக்கரண்டி மாவிற்கு மற்றும் மேலும் நன்றாக வருக்க
  • உணவு வண்ணம்-தேவையென்றால்
  • தயிர்-1 கப், கடைந்தது
  • சோளம் மாவு - 1/4 கப்
  • ஜிலேபி செய்வதற்கு: மைதா மாவு-3/4 கப்

இந்தூரி அவுல் மற்றும் ஜிலேபி செய்வது எப்படி | How to make Indori Poha and Jalebi in Tamil

  1. ஜிலேபி செய்வதற்கு: மைதா, சோளமாவு, தயிர், உணவுகலர்(தேவையென்றால்), சூடான எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து மென்மையான மாவாக செய்துக்கொள்ளவும்.
  2. அதை மூடி 12-24 மணி நேரம் தனியாக வைத்து புளிக்கசெய்யவும். இது நுரைத்த குழிகள் மற்றும் புளித்த மணத்துடன் இருக்க வேண்டும். இந்த மாவு மிகவும் மென்மையாக இருக்கும் படி கலந்துக்கொள்ளவும்.
  3. சர்க்கரை பாகு செய்வதற்கு: சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கடாயில் ஒன்றில் கொதிக்கவிடவும். அது நூல் போன்ற பதத்திற்கு வரும்வரை கொதிக்கவிடவும். (பாகின் ஒரு துளியை 2 விரல்களால் தொட்டு இழுக்கும் போது அது ஒரு நூல் போன்று வர வேண்டும்).
  4. சர்க்கரை பாகை சூடாகவும் தயாராகவும் வைத்துக்கொள்ளவும்.
  5. ஜிலேப்பி செய்ய: சிறிய துளைக் கொண்ட ஒரு கெட்சப் பாட்டில் மாவை ஊற்றிக்கொள்ளவும் அல்லது ஜிப்லாக் பாகிள் மாவை ஊற்றி அதன் ஓரத்தில் சிறிய துளை ஒன்றை போட்டுக் கொள்ளவும்.
  6. நன்றாக பொறியும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடு செய்துக் கொள்ளவும். ஜிலேப்பி மாவை கவனமாக எண்ணெய்ல் வட்டமாக பிழியவும். ஜிலேப்பி மிருதுவாகும் வரை வேகவிடவும். அதனை எண்ணெயில் இருந்து எடுத்து 2-3 நிமிடம் பாகில் போட்டு அவற்றை சமமாக பரவும் படி செய்துக்கொள்ளவும்.
  7. பின் இதனை எடுத்து கம்பி ராக்கில் ஆறவைக்கவும். இதனை சூடாகவோ அல்லது அறைவெப்ப நிலையிலோ வைத்துக்கொள்ளலாம். காற்று போகாத கொள்கலனில் இதனை பாதுகாப்பாக 2-3 நாள்கள் வைத்துக்கொள்ளலாம்.
  8. போஹா செய்வதற்கு: அவுலை 2 முதல் 3 முறை கழுவி உலர செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். அவுலில் சிறிதளவு தண்ணீர் மீதம் இருக்கலாம், ஆனால் அதிகமாக இருக்க கூடாது.
  9. கடாயில் 2 டீக்கரண்டி எண்ணெயை சூடு செய்து கடுகை சேர்க்கவும், கடுகு பொறிய தொடங்கியதும் பெருஞ்சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். வெங்காயத்தை நன்கு வதங்கவிடவும். இதற்கு 3-4 நிமிடங்கள் ஆகும்.
  10. பின் அதில் மஞ்சள்தூள் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து மென்மையாக வேகவிடவும். நேரத்தை சேமிப்பதற்கு இவை வதங்கும் வரை உருளைக்கிழங்கை மைக்ரோவேவில் வேகவிடலாம்.
  11. இதில் அவுலை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். இதனை மூடிவிட்டு 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
  12. அடுப்பை அணைத்து விட்டு வெட்டிவைத்த கொத்தமல்லி இலையை தூவிக் கொள்ளவும்.
  13. உங்களுக்கு விருப்பமான வகையில் அழகுப்படுத்தி சூடாக பரிமாறவும்.

Reviews for Indori Poha and Jalebi in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.