வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு சூப்

Photo of Banana Stem Soup by Saivardhini Badrinarayanan at BetterButter
660
5
0.0(0)
0

வாழைத்தண்டு சூப்

Feb-16-2018
Saivardhini Badrinarayanan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு சூப் செய்முறை பற்றி

சுவையான வாழைத்தண்டு சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைத்தண்டு நறுக்கியது 1 கப்
  2. கொத்துமல்லி இலை சிறிதளவு
  3. மஞ்சள் தூள் 1/4 மேஜைக்கரண்டி
  4. ஜீரகம் 1/2 மேஜைக்கரண்டி
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மிளகு தூள் 1/2 மேஜைக்கரண்டி
  8. உப்பு
  9. பூண்டு 2 பல்
  10. வெண்ணெய் சிறிதளவு
  11. பிரேஷ் கிரீம் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் வாழைத்தண்டுகளை நறுக்கி குக்கரில் சேர்த்து 3 கப் தண்ணீருடன் மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் விட்டு நன்கு வேகவைக்கவும்.
  2. வேகவைத்த வாழைத்தண்டு நன்கு சூடு ஆறியவுடன் மிக்ஸில் போட்டு நன்கு அரைக்கவும்.(வேகவைத்த தண்ணிருடன் அரைக்கவும்)
  3. ஒரு கடாயில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பூண்டு நறுக்கியது, ஜீரகம் , கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. அதில் அரைத்த வாழைத்தண்டு விழுது சேர்த்து கலந்து பின் மல்லித்தூள் , மிளகு தூள், கொத்துமல்லி இலை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  5. நன்கு ஆறியவுடன் வடிகட்டியில் வடிகட்டவும்.
  6. வடிகட்டிய நீரை மறுபடியும் அடுப்பில் வைத்து கொதித்தபின் பிரேஷ் கிரீம் 2 மேஜைக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொத்துமல்லி இலை தூவி இறக்கி வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்