வீடு / சமையல் குறிப்பு / கேரளா கத்திரிக்காய் தீயல்

Photo of Kerala kathirikkai theeyal by Sowmya Sundar at BetterButter
472
5
0.0(0)
0

கேரளா கத்திரிக்காய் தீயல்

Feb-18-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கேரளா கத்திரிக்காய் தீயல் செய்முறை பற்றி

தீயில் கேரளாவில் பிரபலமான உணவு. சின்ன வெங்காயம் வைத்து வறுத்த தேங்காய் மசாலா சேர்த்து செய்வார்கள். நான் கத்திரிக்காயை உபயோகித்து செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கத்திரிக்காய் -1 கப்
  2. சின்ன வெங்காயம்-10
  3. புளி நெல்லிக்காய் அளவு
  4. உப்பு
  5. கடுகு 1டீஸ்பூன்
  6. கறிவேப்பிலை சிறிது
  7. தேங்காய் எண்ணெய்-2டேபிள் ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1டீஸ்பூன்
  9. வறுத்து அரைக்க
  10. தேங்காய் -1/2மூடி
  11. மிளகாய் வற்றல் -7
  12. மல்லி விதை -1 1/2 டேபிள் ஸ்பூன்
  13. சின்ன வெங்காயம்-2
  14. வெந்தயம்-1/4 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் சிவக்க வறுக்கவும்.தேங்காயும் சிவக்க வறுத்து கொள்ளவும்
  2. மிக்சியில் புளி கரைசல் சிறிது விட்டு அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் மீதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து சினன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின்னர் அதனுடன் கத்திரிக்காயை சேர்ந்த வதக்கவும். புளி கரைசல்,உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
  5. காய் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு திக்காக ஆகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்