வீடு / சமையல் குறிப்பு / ஸிம்பிள் வெஜிடபுள் புலாவ்

Photo of Simple veg pulav by Krishnasamy Vidya Valli at BetterButter
312
4
0.0(0)
0

ஸிம்பிள் வெஜிடபுள் புலாவ்

Feb-18-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸிம்பிள் வெஜிடபுள் புலாவ் செய்முறை பற்றி

இது மசாலா இல்லாத மைல்ட் புலாவ். ஹெவி கிரேவிக்கு தகுந்த வெஜ் ரைஸ் ரெசிபி. காய்கறி அதிகம் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பல்லாரி வெங்காயம் -2
  2. உருளைக் கிழங்கு-1
  3. கேரட் -1
  4. பீன்ஸ் -4
  5. பச்ச பட்டாணி -2 மேஜைக்கரண்டி
  6. சௌ சௌ -நீளவாக்கில் நறுக்கியது -1/8 கப்
  7. பாஸ்மதி அரிசி/சீரக சம்பா- 2 கப்
  8. உப்பு -1 தேக்கரண்டி
  9. தாளிக்க
  10. நெய் -4 தேக்கரண்டி
  11. சீரகம் -2 தேக்கரண்டி
  12. கருவேப்பிலை -4 ஆர்க்கு
  13. முந்திரி பருப்பு -8 முதல் 10
  14. பட்டை -1 சிறிய துண்டு
  15. கிராம்பு -2
  16. ஏலக்காய் -2

வழிமுறைகள்

  1. காய்களை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்
  2. அரிசியை களைந்து தண்ணீர் விட்டு காய்கள் நறுக்கி வதக்கும் வரை ஊற விடவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  4. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பச்ச வாசனை போனவுடன் மற்ற காய்கள் போட்டு வதக்கவும்
  6. இரண்டு முதல் நான்கு நிமிடங்கள் வரை வதக்கினால் போதுமானது
  7. அதில் ஊற வைத்த அரிசி யை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்
  8. ரைஸ் குக்கரில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கிங் மோடில் வைக்கவும். குக்கரில் வைப்பதானால் ஒன்று அல்லது இரண்டு விசில் வைக்கவும்.
  9. இறுதியாக உப்பு தூவி கலந்து பறிமாறவும். ரைஸ் குக்கரில் வைத்தால் சாதம் மற்றும் காய்கள் முக்கால் பங்கு வெந்தவுடன் உப்பு தூவி கிளறிக்கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்