வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு மைதா ரொட்டி

Photo of Potato Maida Rotti by Sony Karthik at BetterButter
447
4
0.0(0)
0

உருளைக்கிழங்கு மைதா ரொட்டி

Feb-24-2018
Sony Karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு மைதா ரொட்டி செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு நம்ம வீட்டு குழந்தைகளுக்கு ரொம்ப விருப்பமான உணவு.. அதை கொஞ்சம் வித்தியாசமாக ஒரு ரொட்டி ....நல்ல இருக்கும் ..நீங்களும் செய்து பாருங்கள்......முதல்ல ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்ங்கை வேக வைக்க வேண்டும்...இப்போ உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு நல்ல பிசைந்து கொள்ளவும்.... இதில் 3கப் மைதா மாவை சேர்த்து நல்ல பிசைந்து, அரை கப் வறுத்தரவை சேர்த்து நல்ல பிசையவும்...தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும..இதுல 2தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிசைய ஆரம்பிக்கவும்....இப்போ இதில் தேவை என்றால் தண்ணீர் தெளிக்கவும்....நீங்க மாவை பிசையும் போது அது மாவு பதத்திற்கு வரும்...வேண்டும் என்றால் மட்டும் தண்ணீர் தெளிக்கவும்...இதை ஒரு 5நிமிடம் மூடி வைக்கவும்...இதை கொஞ்சம் கணமாகவே உருட்டி + இந்த வடிவில் வெட்டவும்.... மெலிதாக உருட்ட வேண்டாம்...இப்படி எடுத்து இதன் இருபுறமும் நெய் தடவி வைக்கவும்.....அப்புறம் தோசை கல்லில் நெய் தடவி போட்டு எடுக்கவும்....இங்க பாருங்க நம்ம உருளைக்கிழங்கு மைதா ரொட்டி.... எப்படி சூடான செமயான ருசியான ரொட்டி ...நல்ல இருக்குல...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 3 தேக்கரண்டி நெய்
  2. 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  3. 3 உருளைக்கிழங்கு
  4. 3 கப் மைதா
  5. அரை கப் வறுத்த ரவை
  6. தேவைக்கேற்ப உப்பு

வழிமுறைகள்

  1. முதல்ல ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்ங்கை வேக வைக்க வேண்டும்.
  2. உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு நல்ல பிசைந்து கொள்ளவும். இதில் 3கப் மைதா மாவை சேர்த்து பிசைந்து, அரை கப் வறுத்தரவை சேர்த்து பிசையவும்.
  3. தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும. இதுல 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிசைய ஆரம்பிக்கவும். இதில் தேவை என்றால் தண்ணீர் தெளிக்கவும்.
  4. பிசையும் போது அது மாவு பதத்திற்கு வரும். வேண்டும் என்றால் மட்டும் தண்ணீர் தெளிக்கவும். இதை ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும்.
  5. இதை கொஞ்சம் கனமாகவே உருட்டி + இந்த வடிவில் வெட்டவும். இதன் இருபுறமும் நெய் தடவி வைக்கவும்..
  6. அப்புறம் தோசை கல்லில் நெய் தடவி போட்டு எடுக்கவும்....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்