வீடு / சமையல் குறிப்பு / முடக்கத்தான் தோசை

Photo of Mudakathan Dosai by Kaushika Segaran at BetterButter
602
3
0.0(0)
0

முடக்கத்தான் தோசை

Feb-27-2018
Kaushika Segaran
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முடக்கத்தான் தோசை செய்முறை பற்றி

ஆரோக்கிய பாரம்பரிய உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முடக்கத்தான் கீரை - 2 கட்டு
  2. பச்சரிசி - 1/2 கப்
  3. இட்லி அரிசி - 1/2 கப்
  4. உளுந்து - 2 மேஜை கரண்டி
  5. வெந்தயம் - 1 மேஜை கரண்டி
  6. உப்பு - தேவைக்கு ஏற்ப

வழிமுறைகள்

  1. பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. உளுந்து மற்றும் வெந்தையத்தை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. முடக்கத்தான் கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
  4. கீரை, அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  5. 8 மணி நேரம் மாவை புளிக்க வைத்து விட்டு அதில் உப்பு , தண்ணீர் சேர்த்து மாவை கரைக்கவும்.
  6. தோசை கல் சூடானதும் ஒரு கரண்டி மாவு ஊற்றி வட்ட வடிவில் பரப்பவும்.
  7. மேலும் அதில் எண்ணெய் ஊற்றி 2 பக்கமும் சுடவும்.
  8. பின் சூடான தோசையை தக்காளி சட்னி உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்