பாதாம் பால் | Badam Milk in Tamil

எழுதியவர் T.n. Lalitha  |  14th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Badam Milk by T.n. Lalitha at BetterButter
பாதாம் பால்T.n. Lalitha
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

0

0

பாதாம் பால் recipe

பாதாம் பால் தேவையான பொருட்கள் ( Ingredients to make Badam Milk in Tamil )

  • பால் - 1 லிட்டர்
  • சர்க்கரை - அரை கப்
  • பாதாம் - ஒரு கைப்பிடி
  • முந்திரி - ஒரு கைப்பிடி
  • குங்குமப்பூ - 1 சிட்டிகை
  • ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்

பாதாம் பால் செய்வது எப்படி | How to make Badam Milk in Tamil

  1. பாதியளவு பாதாமை கொதிக்கும் நீரில் ஊறப் போடுங்கள். பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டு, தோலை உரித்து, சிறிது பால், முந்திரி சேர்த்து அரைத் தெடுங்கள். மீதியிருக்கும் பாதாமை மெல்லியதாக சீவிக் கொள்ளுங்கள். அடுப்பில் பாலை வைத்துக் காய்ச்சவும். சூடான பாலில் 2 ஸ்பூன் எடுத்து அதில் குங்குமப்பூவை போட்டு ஊற வைக்கவும். பால் பத்து நிமிடம் கொதித்ததும் பாதாம், முந்திரி விழுது, சர்க்கரை சேர்த்து, மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். அதில் சீவிய பாதாம், ஏலக்காய்த் தூள், சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, நன்றாக கலந்து, ஆறவிடுங்கள். ஆறியபின் பரிமாறுங்கள். 

எனது டிப்:

பாதாம் ஞாபக சக்தி திறனை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இரவு படுக்கும் முன் தினமும் கொடுத்தால் மிகவும் நல்லது.

Reviews for Badam Milk in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.