வீடு / சமையல் குறிப்பு / புரோட்டீன் இட்லி

Photo of Protien Idly by Sowmya Sundar at BetterButter
1
2
0(0)
0

புரோட்டீன் இட்லி

Mar-16-2018
Sowmya Sundar
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புரோட்டீன் இட்லி செய்முறை பற்றி

சாதாரண இட்லி செய்வதற்கு மாற்றாக குழந்தைகளுக்கு தரலாம் இந்த புரதசத்து மிகுந்த இட்லி. பாசிப்பருப்பு மிகவும் லைட்டான அதே சமயம் சத்து நிறைந்த உணவு. அதை கொண்டு இந்த இட்லி செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு-1 கப்
  2. உளுந்து-1/4 கப்
  3. அரிசி- 1/4 கப்
  4. வெந்தயம்-1 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு அரிசி உளுந்து வெந்தயம் அனைத்தையும் களைந்து விட்டு தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு நன்கு அரைத்து கொள்ளவும்
  3. உப்பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் புளித்து பொங்க விடவும்
  4. இட்லி தட்டில் இந்த மாவை விட்டு பத்து நிமிடம் வரை வேக விடவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்